விஜய் மகனுக்கு அஜித் செய்திருக்கும் அட்வைஸ், என்ன சொல்லி இருக்காருனு தெரியுமா?

By krithika · 13/1/2025

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு, அஜித் செய்திருக்கும் அட்வைஸ் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலித்து கொண்டு இருக்கிறார். தளபதி விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். ஜேசன் சஞ்சய், தன் தந்தை விஜயுடன் சேர்ந்து வசந்த முல்லை, நான் அடிச்சா தாங்க மாட்ட போன்ற பாடல்களில் நடனமாடி இருப்பார்.

பின், ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பை முடித்து இருக்கிறார். அதோடு இவர் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்ஷன், சிரி, ‘Pull The Trigger’ போன்ற குறும்படங்களை இயக்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில், ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

ஜேசன் சஞ்சய் முதல் படம்:

இந்த அறிவிப்பு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில் தான், இப்படம் குறித்து மேலும் சில அப்டேட்களை லைகா அறிவித்திருந்தது. அதாவது சஞ்சயின் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறாராம். இந்தப் படத்தின் கதையை தன்னிடம் சஞ்சய் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கூறியதாகவும், தான் அதைக் கேட்டு வியந்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். அதேபோல், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தமன் கமிட் ஆகி இருக்கும் நிலையில், அவரும் சஞ்சயை சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் மேனேஜருடன் சஞ்சய்:

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திராவும், ஜேசன் விஜயும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதாவது சஞ்சயின் படத்திற்கு சுரேஷ் சந்திரா தான் செய்தி தொடர்பாளர் என்பதால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், தங்களின் படத்திற்காக ஒன்றாக இணைந்து வேலை செய்து வருகிறார்களாம்.

சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்த சஞ்சய்:

மேலும், சஞ்சய் படத்தில் கமிட் ஆனவுடன் ஷூட்டிங் பணிகள் மற்றும் புரொடக்ஷன் பணிகள் தொடங்க தாமதம் ஆனதாம். அப்போது சஞ்சய், சுரேஷ் சந்திராவிற்கு தொலைபேசியில் அழைத்து இது குறித்து வருத்தத்தோடு பேசி இருக்கிறார். அதோட தயாரிப்பு நிறுவனம் செய்யும் விஷயங்கள் குறித்தும் சஞ்சய் அவரிடம் கூறியிருக்கிறார். அந்த போன் வந்த சமயம், அஜித்தும் சுரேஷ் சந்திராவின் அருகில் தான் இருந்தாராம். அப்போது, போனில் சஞ்சய் என்று தெரிந்தவுடன் அஜித் போனை வாங்கி பேசியிருக்கிறார்.

அஜித் கொடுத்த அட்வைஸ்:

அவர் சஞ்சயிடம், கவலைப்படாதே, தயாரிப்பு நிறுவனத்தின் பக்கம் இருந்து ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்னிடம் சொல். நான் வேறு நிறுவனத்திற்கு உன்னை பரிந்துரைக்கிறேன். பிரச்சனையை சுமூகமாக தீர்க்கலாம் என்று சொன்னதோடு சஞ்சய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தி உண்மையா என்று தெரியாவிட்டாலும், சுரேஷ் சந்திரா சஞ்சயுடன் நெருக்கமாக இருப்பதை பார்க்கும்போது, இது உண்மையாகத்தான் இருக்கும் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர். தற்போது இந்த செய்தி தான் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full