என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் இருப்பேன் - நடிகர் அஜித் சொல்வது என்ன?

கார் ரேஸ் பற்றி நடிகர் அஜித் சொன்னது

By subhashini · 8/6/2026

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர்.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. அதோடு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு டெல்லியில் பத்ம விருது விழா வழங்கப்பட்டது. இதை அடுத்து அஜித் அவர்கள் தன்னுடைய அடுத்த படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையுமே வெளியிடவில்லை.

அஜித் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக பல கார் ரேஸில் அஜித் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அஜித் அவர்கள் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பிரான்சில் நடந்த கார் பந்தயத்தில் கூட அஜித் பங்கேற்று இருந்தார்.

அஜித் பேட்டி:

அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் அஜித்தின் உடைய தாயார் காலமாகி இருந்தார். தன்னுடைய தாயின் இறுதி சடங்கெல்லாம் செய்து முடித்துவிட்டு அஜித் அவர்கள் மீண்டும் கார் ரேசில் பங்கு பெற்றார். அஜித்தின் உடைய இந்த செயலை பலருமே பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கார் ரேஸ் தொடர்பாக அஜித் அளித்த பேட்டியில், நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இதில் நிலைத்து நிற்பேன்.

கார் ரேஸ் பற்றி சொன்னது:

ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கார் பந்தயத்தில் எனக்குள் இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன். ஆனால், என்னுடைய குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால் தற்போது பந்தய பயிற்சி களுக்காக அதிக நேரத்தை செலவழித்து வருகிறேன். நாங்கள் இப்போது எங்களுடைய 2027 ஆம் ஆண்டிற்கான பந்தய திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full