அஜித் கார் ரேஸில் கலந்துக்க காரணம் ஷாலினி இல்லை, வேறு ஒருவராம் - அவரே சொன்ன தகவல், யார் தெரியுமா?
ரேஸிங் தொடர்பாக நடிகர் அஜித் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. அதோடு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு டெல்லியில் பத்ம விருது விழா வழங்கப்பட்டது.
அஜித் திரைப்பயணம்:
இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருந்தார். இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக மூன்று கார் ரேஸில் அஜித் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
அஜித் பேட்டி:
தற்போதும் அஜித் தன்னுடைய கார் ரேசில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித், நான் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 மணி நேரம் ஓட்டக்கூடிய கார் ரேஸில் கலந்து கொண்டிருந்தேன். அதில் ஐந்தாம் இடத்தையும் பிடித்தேன். அப்போது என்னிடம் சுபாஷ் சந்திரபோஸ், தொடர்ந்து நீங்கள் கார் ரேஸில் நன்றாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து ரேஸில் கலந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். அதற்கு பிறகு தான் நான் கார் ரேசில் தொடர்ந்து கலந்து கொள்ள முடிவு செய்தேன்.
https://www.youtube.com/watch?v=l34JLiG7M4Q
கார் ரேஸ் பற்றி சொன்னது:
மேலும், என்னுடைய பள்ளிப்படிப்பையும் நான் பாதியிலேயே நிறுத்தி விட்டேன். அப்போது என்னுடைய பெற்றோர்கள், நீ படி இல்லை வேலைக்கு செல். வீட்டில் சும்மா இருக்க கூடாது. அது மட்டும் இல்லாமல் உனக்கு ரேசிங் மீது அதிக ஆர்வம் இருப்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால், அதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டும். எங்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாமல் கூட போகலாம். அதனால் நீ உனக்கான ஸ்பான்சரை தேடிக் கொள். உன்னுடைய கனவை நோக்கி ஓடு என்றெல்லாம் அறிவுரை செய்திருந்தார்கள். அவர்களுடைய அந்த அறிவுரை எனக்கு நம்பிக்கை கொடுத்தது.
பெற்றோர் பற்றி சொன்னது:
அதோடு என்னுடைய பெற்றோர்களும் என்னுடைய கார் ரேஸிற்கு பக்கபலமாக இருந்தார்கள். இந்த விஷயத்தில் நான் ரொம்பவே பாக்கியசாலி. நான் சினிமாத்துறைக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையை ஒரு நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உறுதுணையாகவும் இருந்தது. அது மட்டும் இல்லாமல் என்னுடைய ரேசிங் கனவை நினைவாக்க சினிமா தான் உதவியாக இருந்தது. நான் ரேஸ் தொடர்பாக நிறைய பேட்டி அளிப்பதற்கு காரணம் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிய வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.