தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனர் உடன் கைகோர்க்கும் அஜித் - வெளியான 'ஏகே 65' படத்தின் மாஸ் அப்டேட்

By subhashini · 6/11/2025

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி.

.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருந்தார்கள். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித் குறித்த தகவல்:

இதை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 64 படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தினுடைய ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த படம் ஹார்பர் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் கதை அம்சமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏகே 65 படம்:

இந்த படம் தொடர்பான அறிவிப்பு சீக்கிரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஏகே 65 படத்தின் உடைய அப்டேட் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித்தின் உடைய 65 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கயிருக்கிறார். இந்த படம் 2027 ஆம் ஆண்டு தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது அந்த படத்திற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகள் நடக்கிறது. லோகேஷ் சொன்ன ஒன் லைன் கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாம்.

https://www.youtube.com/watch?v=gw8hz1WBxyI

லோகேஷ் பற்றிய தகவல்:

இந்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்று இன்னும் தெரியவில்லை. கூடிய விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கூலி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூல் செய்திருந்தது. இதை அடுத்து லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full