இப்போ யாராவது அப்படி சொன்னா பளார்னு விட்டு லைப்ப பாருடானு சொல்லுவேன் - அஜித் தம்பியின் பேச்சு

By ·

பிரபல நடிகர் அஜித்தின் தம்பி அனில் குமாரின் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவரின் திரை உலக சாதனையை பாராட்டி சமீபத்தில் கூட இவருக்கு மத்திய அரசால் ‘பத்ம பூஷண் ‘ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட இவர் துபாயில் நடைபெற்ற 24 H கால் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்து கொண்டு 3 ஆவது இடத்தை வென்றார். தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன் உட்பட பல ஜெரினா நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

அஜித் குடும்பம்:

இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் இப்படம் வெளியாகியுள்ள உள்ளது. மேலும், அஜித் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆனால், இவருடைய தந்தை தமிழ், தாய் சிந்தி. இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆவார். அதில் அஜித் இரண்டாவது மகன் ஆவார். அஜித்துக்கு இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் அணில் குமார். இவர் jodi 365.com எனும் மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=0OKXWI1q_5k&t=1129s

அஜித் தம்பி :

மேலும், தல அஜித்தின் சகோதரர் அஜித்தை போலவே சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் உள்ளார். இவரும் அஜித்தை போல மிகவும் பிரைவேட்டான ஒரு நபர் தான். இவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துல பிறந்து, ஸ்கூல்ல பாதியிலே நிறுத்திட்டு, மெக்கானிக் வேலை பார்த்துட்டு, வீட்ல அவ்வளவு திட்டு வாங்கிட்டு சினிமாவுக்கு வந்தாரு. இன்னைக்கு என் அண்ணனுக்கு பத்ம பூஷண் கிடைத்தது ஒரு தேசிய பெருமையா நான் பார்க்கிறேன். எங்க குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய விருது கிடைச்சது ஒரு பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.

பிரேக் அப் இருந்தது:

மேலும். என்னை கூட ஐஐடியில் படித்துவிட்டு வெளிநாட்டில் கிரீன் கார்டு எல்லாம் வாங்கிய பின் மீண்டும் இந்தியா வந்து ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்துறேன் என்று கேலி பண்ணாங்க. ஆனா, எனக்கு அது தான் பிடித்திருக்கிறது. இப்போதெல்லாம் எல்லா விஷயத்திற்கும் இளைஞர்கள் வாழ்க்கையை இழக்க முடிவு செய்துவிடுகிறார்கள். நான் என் வாழ்க்கை அனுபவத்தை சொல்கிறேன். எனக்கு என்னுடைய முதல் பிரேக் அப் ஞாபகம் இருக்கிறது. அந்த பெண்தான் என்னை பிரேக் அப் செய்தார். நாங்கள் குழந்தைகள் பெயர், வாழ்க்கையில பலவற்றை டிஸ்கஸ் செய்தோம். அப்போ நான் இருந்த சூழ்நிலையில், துப்பாக்கி மட்டும் இருந்தால் சுட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதற்குப் பிறகு என்னுடைய 30 வயதில் மீண்டும் ஒரு பிரேக் அப் நடந்தது.

பளார்னு அடிப்பேன் :

அப்போது நான் என்னுடைய நண்பனின் திருமணத்திற்காக ஜெர்மனி சென்றிருந்தேன். அங்கிருந்து என் காதலிக்கு கால் செய்தால் கால் எடுக்க மாட்டேங்கிறாள். அதுக்கப்புறம் தான் எனக்கு புரிஞ்சது அதுவும் பிரேக் அப் என்று. அப்போதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் ஒரு பேப்பரில், நான் சந்தித்த 44 ஏமாற்றங்களை எழுதினேன். அப்புறம்தான் இத்தனை ஏமாற்றங்களை ஈசியாக எடுத்துக் கொண்ட நான் ஏன் இதை ஈசியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உணர்ந்தேன். அந்த பேப்பரை இன்னுமும் கூட நான் வைத்திருக்கிறேன். யாராவது சின்ன பசங்க ஐயோ எனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது என்று சொன்னாபளார்னு விட்டு லைப்அ பாருடானு சொல்லுவேன் என்று அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full