நான் கடன் அடைக்க தான் சினிமாவுக்கு வந்தேன்? அஜித் குமார் எஸ்க்ளுசிவ் தகவல் - என்ன தெரியுமா?
தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து நடிகர் அஜித்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே அஜித் பத்ம பூஷன் விருது வாங்கி செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு டெல்லியில் தான் பத்ம விருது விழா நடைபெற்றது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார்.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பத்மபூஷன் விருது வாங்கியதை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபல ஊடகத்திற்கு அஜித்குமார் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அஜித், சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் நான் அப்பாவியாக இருந்தேன். அப்போது என்னிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், எப்படி சினிமாவில் வந்தீர்கள்? என்று கேட்டார்.
அஜித் பேட்டி:
ஆரம்பத்தில் என்னுடைய பிசினஸ் எல்லாம் சில பிரச்சனை ஏற்பட்டு கடன்கள் வந்தது. அதனால் சில படங்களில் நடித்து அதன் மூலம் கடன்களை திரும்ப அடைக்க வேண்டும் என்று ஒரு எண்ணத்தில் தான் சினிமாவில் வந்தேன். அதை நான் அந்த பத்திரிக்கையாளரிடம் சொன்னேன். உடனே அவர், பணத்திற்காக தான் நீங்கள் வந்தீர்களா? என்று கேட்டார். அதற்கு நான், எத்தனை பேருக்கு வாங்கியதை திரும்ப கொடுக்கும் எண்ணம் இருக்கிறது? இந்த செயலுக்காக என்னை ஏன் பாராட்டாமல் இருக்கிறீர்கள்? என்று சொன்னேன். ஆரம்பத்தில் நான் ஆடிஷன் எல்லாம் கலந்து கொண்டேன்.
சினிமா வந்த காரணம்:
கிடைக்கும் வாய்ப்புகளுக்கு நான் தகுதியானவனாக இருக்க வேண்டும் என்று நான் நிறைய என்னை நிரூபிக்க தொடங்கினேன். நான் திரையுரையில் பிரபலமாக வேண்டும் என்று எண்ணத்தில் எல்லாம் வரவில்லை. என்னுடைய கடனை அழைப்பதற்காக தான் சினிமாவில் வந்து நடித்தேன். சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் எனக்கு தமிழ் கூட சரியாக பேச வராது. அதனால் என்னுடைய சில படங்களுக்கு பிற நடிகர்கள் தான் டப்பிங் செய்தார்கள்.
சினிமா பற்றி சொன்னது:
என்னுடைய ஆறாவது படத்தில் தான் நான் டப்பிங் செய்தேன். அப்போது என்னுடைய தமிழ் உச்சரிப்பிற்காக நிறைய கிண்டல் கேலி எல்லாம் செய்தார்கள். அதற்கு பிறகு தான் நான் தமிழை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தினேன். நான் முழு கவனத்துடன் என்னுடைய வேலையை செய்தேன். நான் தான் சிறந்தவன் என்று சொல்லவில்லை. நான் செய்த விஷயங்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன். மேலும், நான் நடித்ததில் வாலி படம் என்னுடைய மனதிற்கு ரொம்பவே நெருக்கமானது. அதற்கு முன்பே எனக்கு மக்களிடையே அன்பு கிடைத்தது. இருந்தாலும், வாலி படம் எனக்கு பல கதவுகளை திறந்து வைத்தது.
https://www.youtube.com/watch?v=U_c5aCdBYdE
படங்கள் பற்றி சொன்னது:
நான் நடித்த சில கதாபாத்திரங்களில் யாராலும் நடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், 'வாலி, மங்காத்தா, பில்லா, வரலாறு' போன்ற திரைப்படங்களில் என்னுடைய கதாபாத்திரங்கள் சரியாக பொருந்தி இருந்தது. என்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டுவதற்கு இந்த படங்கள் எல்லாம் உதவியது. என்னாலும் இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்று சில திரைப்படங்கள் எல்லாம் எனக்கு சப்ரைஸ் செய்தது என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்