அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் என் விடாமுயற்சிக்கு சக்தி- அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை
நடிகர் அஜித் வெளியிட்டு இருக்கும் நன்றி அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.
இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் '24H' கார்பந்தயம் துபாயில் நடந்தது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கி இருக்கிறது.
அஜித்குமார் ரேசிங் டீம்:
கடந்த ஆண்டு 'அஜித்குமார் ரேசிங் டீம்' என்ற குழுவை அஜித் உருவாக்கி ரேஸிங்க்கு தேவையான அனைத்தையுமே செய்து வந்திருந்தார். தற்போது அந்த குழு உடனே கார் பந்தயத்திலும் அஜித் களம் இறங்கி இருந்தார். இடையில் அஜித் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின் மீண்டும் கலந்து கொண்டார். அதோடு இவர் தன் ரசிகர்களுக்காக பேட்டியும் கொடுத்து இருந்தார். மேலும், நடந்து முடிந்த இந்த 991 பிரிவில் கார் ரேஸில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
பிரபலங்கள் வாழ்த்து:
இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் மேடையிலேயே பரிசு வாங்கும் போது அவருக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வாழ்த்து செய்துள்ளார்கள். பின் தன்னுடைய மகனை மேடையில் ஏற்றிய அஜித், அவருடைய ஒரு கையில் கோப்பையும் இன்னொரு கையில் இந்திய தேசிய கொடியும் கொடுத்து காண்பித்து இருந்தார் அதற்க்குப்பின் தன்னுடைய அணியினர் மற்றும் தன்னுடன் இருந்தவர்களுக்கு அஜித் நன்றி சொல்லி பேசி இருக்கிறார்.
அஜித் அறிக்கை:
இப்படி இருக்கும் நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் அஜித் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அன்பான அனைவருக்கும் வணக்கம்! “துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களை பற்றியது தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.