சொந்த தொழில் செய்து நஷ்டம் அடைந்த அஜித், பலரும் அறியாத தகவல் - அவரே அளித்த பேட்டி

By subhashini · 21/10/2022

சொந்தமாக தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்து இருக்கும் அஜித் குறித்து பலரும் அறியாத விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துணிவு படம்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதால் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் அளித்த பழைய பேட்டி:

இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது அஜித் அவர்கள் பைக்கில் உலக நாடுகள் முழுவதும் சுற்றுலா செல்ல முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கி அஜித் நஷ்டம் அடைந்திருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாக அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது.. அந்த வகையில் அஜித் அளித்த பழைய பேட்டி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

நஷ்டம் அடைந்த சொந்த தொழில்:

அதில் அஜித், நான் சொந்தமாக ஈரோட்டில் டெக்ஸ்டைல்ஸ் குறித்த பிசினஸ் தொடங்கியிருந்தேன். அப்போது எனக்கு மாடலிங் மற்றும் மோட்டார் பைக் ரேஸில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் என்னோட பிசினஸில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் நான் நடத்திய சொந்த பிசினஸ் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் நான் மாடலிங் மற்றும் நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி இருந்தேன் என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full