இதை இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன் - நடிகர் அஜித்குமார் ஓபன் டாக்

By subhashini · 29/9/2025

ஷாலினி பற்றி நடிகர் அஜித் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குட் பேட் அக்லி.

இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருந்தார்கள்.

அஜித் கார் ரேஸ்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் தன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் கார் பந்தயம் நடைபெற்றிருக்கிறது. இதில் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்று இருக்கிறது. நேற்று நடந்த இந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறது.

அஜித் பேட்டி:

இதற்கு ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அஜித், ஷாலினி கையாளுகிற விஷயம் ஏராளமாக இருக்கிறது. அவருடைய ஆதரவில்லை என்றால் இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது. நான் இல்லாதபோதும் அவர்தான் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறார். குழந்தைகள் என்னை பார்ப்பதே ரொம்ப அரிதான விஷயம். அவர்கள் என்னை மிஸ் செய்வது போலவே நானும் அவர்களையும் செய்கிறேன்.

ஷாலினி பற்றி சொன்னது:

நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்ய நினைத்தால் சில நேரங்களில் தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். என்னுடைய மகனுக்கும் கார் ரேசிங் ரொம்ப பிடிக்கும். அவன் கோ கார்ட்டிங் தொடங்கி இருக்கிறான். ஆனால், அதில் அவன் இன்னும் அதிக கவனம் செலுத்தவில்லை. சினிமாவாக இருந்தாலும் சரி, ரேசிங்காக இருந்தாலும் சரி என் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்க எனக்கு விருப்பமில்லை. அவர்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full