நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான, முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். இவரை அனைவரும் கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். நடிகர் விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார்.

இவர் தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். தற்போது இவருக்கு 68 வயது ஆகிறது. சினிமா மற்றும் அரசியலில் கலக்கி வந்த இவருக்கு எடையில் கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் போனது இவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டது. ஆனால், இவரை பூரண குணம் செய்ய முடியவில்லை. பின் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால், அதுவும் இவரை பழைய நிலைக்கு கொண்டு வர பயனளிக்கவிலை.

Advertisement

‘சாதாரண மனுஷனுக்கு தான் ஷாக்கடிக்கும், ஆன இந்த நரசிம்மாவ பார்த்த அந்த கரண்ட்டுக்கே ஷாக் கொடுக்கும்’ என்று வீரமாக இருந்த மனுஷனை இப்போது உடல் நிலை குன்றி பார்க்கும் போது கவலையாக உள்ளது என்று பலர் கூறுகிறார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து கட்சியின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘கேப்டன் அவர்கள் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பரிசோதனைக்காக சென்று கேப்டனுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண நலத்துடன் கேப்டன் உள்ளார் என்று’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement