கன்னியாகுமரி தொகுதியில் வென்றுள்ள விஜய் வசந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து நிலையில் தன் மீது வைக்கப்பட்ட முதல் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் விஜய் வசந்த்.நடந்து முடிந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மறைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் மகனும் நடிகருமான வசந்தகுமார் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த  போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1,21,762 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் விஜய் வசந்த்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மறைந்த வசந்தகுமார் 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார்.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற விஜய் வசந்த்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விஜய் வசந்த் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கப்பட்டது. வரும் நாட்களில் மக்களின் தேவைகளை ஆராய்ந்து இன்னும் ஏராளமான சேவைகள் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறி பதிவிட்டிருந்தார்.

Advertisement

இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், MPLAD fund எல்லாம் மத்திய அரசு நிப்பாட்டி வச்சிருக்காங்க. நீங்க மட்டும் எப்படி manage பண்ணுறீங்க? என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நிதி வசதிகள் பெற தாமதம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வசதியை எனது சொந்த செலவில் செய்துள்ளேன். நம்மால் முடிந்தவரை மக்களுக்காக செய்வோம் என்று பதில் அளித்து வாயை அடைந்துள்ளார்.

Advertisement
Advertisement