சொந்த நிலம் கூட இல்ல, இருந்தா விவசாயம் பண்ணியாவது ஊர்ல பொழச்சிருப்பேன் - அப்புக்குட்டியின் பரிதாப நிலை.
தம்பி மயில்வாகனம் என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் அப்புகுட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்புகுட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் வெண்ணிலா கபடிகுழு, அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கதாநாயகனாக முதன் முதலாக அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதையும் வாங்கியது. அப்புகுட்டி அவர்கள் பல படங்களில் நடித்து இருந்தாலும் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நடிகர் அப்புக்குட்டி அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. நடிகர் அப்புக்குட்டி அவர்கள் முதன் முதலாக 1988ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி நடிப்பில் வெளிவந்த மறுமலர்ச்சி என்ற படத்தில் நடித்திருந்தார்.மேலும்,இவர் மறுமலர்ச்சி படத்தை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு சொல்ல மறந்த கதை என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதற்குப் பிறகு தான் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கில்லி படத்தில் வேலுவின் வீட்டிற்கு வரும் சாமியார் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், ஒன்பது ரூபாய் நோட்டு, வெண்ணிலா கபடிகுழு, மதராசபட்டினம், குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன், மரியான், வீரம், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக வாழ்க விவசாயி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது வேலை எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார் அப்புகுட்டி. முதலில் சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புக்குட்டி, இப்போது கோவூரில் சென் ஜோசப் கல்லூரி அருகில் இருக்கும் பாலு தெருவில் வசித்து வருகிறார். இதுவும் வாடகை வீடுதான்.சொந்த வீடு வாங்குவதற்கு வசதியில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் அப்புக்குட்டி, இந்த கொரோனா இரண்டாம் அலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பு குட்டி, எங்க சொந்த ஊரில் எங்களுக்கு விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாயத்தில் கூலி தொழில் செய்பவர்கள் தான்.எங்களுக்கு விவசாய நிலம் இருந்து இருந்தால் விவசாயம் செய்தோ அல்லது ஆடு, மாடுகளை மேய்த்தோ என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து இருப்பேன். ஆனால், வறுமையில் கஷ்டப்பட்டு வாழுகின்ற ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பதில் பிறந்தவன் . ஒரு வேளை சோறுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருக்கிறேன என்று கூறி இருந்தார்.