எந்த பந்தாவும் இல்லாமல் தம்பிராமய்யாவின் சொந்த ஊர் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ஜூன்
நடிகர் அர்ஜுன் தம்பிராமய்யாவின் ஊர் திருவிழாவில் கலந்து கொண்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்ல பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 காலகட்டம் தொடங்கி இன்று வரை பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்சன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அது மட்டும் இல்லாமல் 90 காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லீ என்று பெயர் எடுத்தவர் நடிகர் அர்ஜுன். இவர் 1984 ஆம் ஆண்டு 'நன்றி' என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாம் ஆக்சன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனால இவருக்கு என்றும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அர்ஜுன் குறித்து:
மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என்ன பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதேபோல சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார். தற்போது இவர் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன்தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
https://www.youtube.com/shorts/WVikt8ef6ds
அர்ஜுன் குடும்பம்:
இறுதியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருந்த 'லியோ' என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஐஸ்வர்யா அர்ஜுன்- உமாபதி திருமணம்:
அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா அர்ஜுன், பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை கடந்த சில வருடங்களாக காதலித்து, சமீபத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான, அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்று இருந்தார். அதன் மூலம் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணத்திற்கு பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.
தம்பி ராமையா ஊர் திருவிழாவில் அர்ஜுன்:
தற்போது, நடிகர் அர்ஜுன் தம்பி ராமையாவின் ஊர் திருவிழாவில் கலந்து கொண்ட வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டஅந்த திருவிழா நிகழ்ச்சியில், பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரின் இசை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது சம்மந்தி பிரபல காமெடி நடிகர் ராமையா கலந்து கொண்டனர். எந்த பந்தாவும் இல்லாமல் தம்பி ராமையாவின் ஊர் திருவிழாவில் கலந்து கொண்டதற்காக நடிகர் அர்ஜுனை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.