அஜித் சாருடன் இருந்த ஒவ்வொரு நாளும் இப்படி - குட் பேட் அக்லி பட அனுபிவத்தை பகிர்ந்த அர்ஜுன் தாஸ்

By subhashini · 10/4/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பின்னணி பாடகர் என்று பன்முகங்களை கொண்டவர். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை தொடர்ந்து தற்போது இவர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர்.

குட் பேட் அக்லி படம்:

குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இன்று பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அர்ஜுன் தாஸ். இந்த நிலையில் இவர் குட் பேட் அக்லி படம் தொடர்பாக பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், எனக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கிறது. எனக்கு ரொம்ப பதட்டமாகவும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் நிறைய உணர்வுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அர்ஜுன் தாஸ் பதிவு:

D'ONE நிறுவனத்தில் நான் வேலை செய்த போது அஜித் சாருடைய படங்களுக்கான மார்க்கெட்டிங் விளம்பரங்கள் எல்லாம் செய்வேன். அப்போது அஜித் சாரின் படங்களில் அவருடன் நடிப்பேன் என்று ஒருபோதுமே நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு அது உண்மையாகி இருக்கிறது. D'ONEல் நாங்கள் இரவு முழுவதுமே கண்விழித்து அதிகாலையில் தியேட்டருக்கு சென்று பார்வையாளர்களின் வரவேற்பை கவனிப்பதெல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இன்று அதே D'ONE பையனாக அதை மீண்டும் செய்வேன்.

அஜித் பற்றி சொன்னது:

ஒரு வித்தியாசம் என்னவென்றால் நான் அஜித் சாருடன் ஒன்றாக நடித்திருப்பது சந்தோசம். அதோடு ஆடியன்சிடம் வரும் நேரடி ரியாக்ஷனை பார்க்க முடியும். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். இது உங்கள் மீதான முழுமையான மரியாதை, உங்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளையும், உங்கள் கருணையும், உங்களுடன் உரையாடல்கள், நகைச்சுவைகள், கொடுத்த ஆலோசனைகள் எல்லாவற்றையும் கொண்டாட்டத்துடன் மதித்து எப்போதுமே போற்றுவேன். இதற்கு முன்பும் சொல்லி இருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன்.

இப்போது நான் நடித்திருப்பது உங்களால் உங்களுக்காக தான். மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் நம்புகிறேன். அஜித் சாரோட ரசிகர்களுக்கு உங்கள் அனைவரின் அன்பிற்கும் மரியாதைக்கும் ரொம்ப நன்றி. நான் உண்மையிலேயே உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். குட் பேட் அக்லி படத்தைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஒரு முழுமையான கொண்டாட்டத்தை பெறுவீர்கள் என்று நம்புகிறேன். ஆதிக் சார் உங்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்தும் நன்றியை வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாக்குறுதியை மறந்து விடாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full