நான் நொந்து போய் மன வலியோட காத்திருக்கேன் - வேதனையில் சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன் சொன்னது
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் படம் வெளியாக தாமதமானது. பின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. விசாரணையில் தணிக்கை குழுவில் 5 நபர்களில் நான்கு பேர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஒருவர் மட்டும் தான் ஆட்சபனை தெரிவித்து இருக்கிறார். நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க சொல்லி தீர்ப்பு கொடுத்தும் மறு ஆய்வுக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
ஜனநாயகன் படம்:
பொங்கலுக்கும் படம் வெளியாகாததால் ரசிகர்கள் எல்லோருமே மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் சின்னத்திரை சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன் ஒரு சிறு ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தொடர்பாக நடிகர் அருண்குமார் அளித்த பேட்டியில், கடந்த ஒரு வாரமாக எனக்கு தூக்கமே இல்லை. டிவியில் 20 வருடத்துக்கு மேலாக இருந்தாலும் பெரிய திரையில் எனது முதல் படம் இதுதான்.
இந்த படத்தினுடைய வாய்ப்பு வந்தபோது, முதல் படமே விஜய் சார் படமா என்று நினைத்து நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.
https://www.youtube.com/watch?v=rsSOQsprfhc
அருண் குமார் பேட்டி:
படம் வெளியாகிற தேதியை நான் மட்டும் இல்லை என்னுடைய குடும்பமே ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. விஜய் சார் படம் என்றால் சும்மாவே தெறிக்க விடுவோம். அரசியல் என்ட்ரி, கடைசி படம்னு அறிவித்ததும் எல்லோருமே சேர்ந்து திருவிழா மாதிரி கொண்ட இருந்தோம். ஆனால், கடைசி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. படம் வெளியே வர முடியாத ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. லட்சக்கணக்கான விஜய் சார் ரசிகர்களைப் போல நானும் என் வீட்டாருமே கடுமையான மன உளைச்சலில் இருக்கிறோம். டிவியில் இருப்பவர்களுக்கு தங்களை பெரிய திரையில் பார்க்கிற அந்த நிமிடம் ரொம்பவே சந்தோஷமான ஒன்று. அனுபவிப்பவர்களால் மட்டும் தான் அதை உணர முடியும்.
ரிலீஸ் சர்ச்சை:
அப்படி ஒரு நாளுக்காக மனவலியோடு காத்துக் கொண்டிருக்கிறேன். படம் வெளிவராத சூழல் என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தி இருக்கிறது. விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் டீடைலாக நான் எதுவும் பேசக்கூடாது. பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று வெளியில் பேசுவதாக கேள்விப்பட்டேன். ஒரு வாதத்துக்கு அதுவே உண்மைன்னு எடுத்துக் கொண்டால் கூட, அந்த படம் கதைக்காக தேசிய விருது வாங்கியது. தேசிய விருது வாங்கிய கதையில் திரும்பவும் சென்சார் கட்டுனா அது எப்படின்னு ஒண்ணுமே புரியவில்லை. நான் ரொம்பவே நொந்து போய் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்