ஜனநாயகனில் என் கேரக்டர் ரெஜிஸ்டர் ஆகும்ன்னு நினைக்கவே இல்லை - சீரியல் நடிகர் அருண் எமோஷனல்

By subhashini · 21/4/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. கோர்ட்டில் கேஸ் நடப்பதால் படம் இன்னும் படம் வெளியாகவில்லை. இது அடுத்து சமீபத்தில் தான் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஜனநாயகன் படத்தில் நடித்த நடிகர் அருண், நிறைய நண்பர்களிடம் இருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருக்கிறது.

ஜனநாயகன் படம்:

தளபதி படத்தில் நடித்ததை நான் சொல்லவில்லை என்று கோபித்துக் கொண்டார்கள். நான் டிவிக்கு வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதற்கு முன்னாடி சில சினிமா வாய்ப்புகள் வர மாதிரி இருக்கும். ஆனால், கடைசியில் வராது. அதனால் ஜனநாயகன் வாய்ப்பு வந்தபோது அவ்வளவாக வெளியில் சொல்லவில்லை. முதல் படமே விஜய் சார் படம் என்பதால் எனக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது. அந்த சந்தோஷத்தோடவே நான் படத்தில் நடித்தேன். இருந்தாலுமே உள்ளுக்குள் ஒரு சின்ன சஞ்சலம் இருந்தது. பெரிய ஹீரோ படம் என்பதால் நம்முடைய கேரக்டர் ரிஜிஸ்டர் ஆகுமா? ஸ்கிரீனில் ஹீரோ கூட வருவோமா? நடித்த சீன் எடிட்டில் போய்விடுமா? என்றெல்லாம் நிறைய பயம்.

அருண் பேட்டி:

அதனால் நான் யாரிடமும் சொல்லவில்லை. நெருக்கமான சிலருக்கு மட்டும் தான் நான் படத்தில் நடித்த விஷயம் தெரியும். சூட்டிங் முடிந்த நாளிலிருந்து படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து ஆர்வமாக இருந்தேன். விஜய் சார் அரசியல் என்ட்றி அரசியல் ஏரியாவிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. முதல் படமே பெரிய மெமரியாக இருக்கின்றது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டு கடைசியில் இப்ப வரைக்கும் படம் திரைக்கு வரவில்லை. இந்த சூழலில் தான் இந்த படத்தை இணையத்தில் வெளியானது.

படம் பற்றி சொன்னது:

அதன் மூலம் பார்த்தவர்கள் தான் போன் பண்ணி என்னிடம் பேசினார்கள். சினிமாவில் முதல் படத்தை தியேட்டரில் போய் பார்க்கணும் என்று காத்திருந்தேன். ஆனால், இப்படி ரிலீஸ் ஆகும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. அதே நேரம் படத்தில் என்னுடைய கேரக்டர் எல்லோருக்கும் ரெஜிஸ்டர் ஆனது நினைப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இப்படி திருட்டுத்தனமாக இந்த படத்தை வெளியே லீக் செய்ததுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. நிறைய பேருடைய உழைப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்பவே பாதிக்கப்படுவார்கள். இன்னும் சில தினங்கள் காத்திருந்து படம் முறைப்படி ரிலீஸ் ஆனதும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கன்னு தமிழக மக்களையும் விஜய் சார் ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full