திடீரென முடிவுக்கு வரும் `மீனாட்சி பொண்ணுங்க' தொடர்' இது தான் காரணம்- சீரியல் ஹீரோ ஆர்யன் போட்ட பதிவு
திடீரென `மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் முடிய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் 'மீனாட்சி பொண்ணுங்க'. இது ஜீ தெலுங்கு தொடரான 'ராதம்மா குத்துரு'வின் ரீமேக் ஆகும்.
தமிழில் ஆர்யன், ஸ்ரீரஞ்சனி சௌந்தர்யா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக சம்பாதித்து வளர்த்து வருபவர் தான் மீனாட்சி. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், 'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ஆர்யன்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியல்:
அந்தத் தொடருக்குப் பிறகு தான் இவர் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதேபோல் இந்த சீரியலில் கதாநாயகியாக முதலில் கமிட் ஆன நடிகை மோக்ஷிதா. திடீரென இவர் தொடரிலிருந்து விலக அவருக்கு பதிலாக நடிகை செளந்தர்யா கதாநாயகியாக கமிட் ஆனார். `அதற்கு பின் அர்ச்சனா அந்தத் தொடரிலிருந்து விலக அவருக்கு பதிலாக ஶ்ரீரஞ்சனி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
சீரியல் குறித்த தகவல்:
இப்படி சீரியலில் இருந்து பல பேர் மாற்றம் செய்து இருந்தாலும் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.
இதுவரை மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இதற்கு காரணம், இந்த சீரியலில் சக்தி மற்றும் வெற்றியின் காதல்- மோதல் தான். இதன் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.
முடிவுக்கு வரும் சீரியல்:
இப்படி இருக்கும் நிலையில் திடீரென மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வரும் இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் மீனாட்சி பொண்ணுங்க ஹீரோ வெற்றி என்கிற ஆர்யன் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிகிறதா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும், ஆமாம், இன்னொரு பெரிய நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
சீரியல் முடிய காரணம்:
இப்படி இவர் கூறியிருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு பிரைம் டைமில் ஒளிபரப்பாகி இருந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் திடீரென்று மாலை 6:00 மணிக்கு மாற்றி இருந்தார்கள். இதனால் சீரியல் உடைய டிஆர்பியும் குறைந்தது. இதனால் தான் இந்த சீரியல் முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.