நல்ல படம் கொடுத்தால் நல்ல கருத்து சொல்வார்கள், டின்ஏ படம் - பிரஸ் மீட்டில் அதர்வா சொன்னது

By subhashini · 23/6/2025

தென்இந்திய சினிமா திரை உலகில் 80, 90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவரை ‘இதயம் முரளி’ என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரின் மூத்த மகன் தான் அதர்வா. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. இருந்தும் இவர் பெரிய படங்களில் நடித்துக் கொண்டு வருகின்றார். அந்த வகையில் அதர்வா அவர்கள் அட்ரஸ், தானா உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என்ற படத்தில் அதர்வா நடிக்கிறார். இதை சுதா கொங்காரா இயக்கி வருகிறார்.

அதர்வா திரைப்பயணம்:

இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில்ஜெயம் ரவி, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது அதர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் இருக்கும் படம் டிஎன்ஏ. இந்த படத்தை மான்ஸ்டர், பர்கானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிமிஷா சஜயன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதர்வா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் மதுரை சென்றிருந்தபோது அதர்வா மீனாட்சி அம்மன் கோவிலை தரிசனம் செய்து பத்திரிகையாளர்களை செந்தித்து பேட்டி அளித்திருந்தார். அப்போது அதர்வா, மதுரைக்கு வரும் போதெல்லாம் நான் மீனாட்சி அம்மனை தரிசித்துப் போவேன். டிஎன்ஏ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஊராக சென்று படம் பார்த்து வருகிறோம். படத்தை பார்த்தவர்களுக்கு நன்றி. பார்க்காதவர்கள் நிச்சயமாக தியேட்டரில் சென்று படத்தை பாருங்கள்.

https://www.youtube.com/shorts/rBMVP7W0CCk

படம் பற்றி சொன்னது:

மேலும், இரண்டு மாதத்திலேயே பராசக்தி படத்தினுடைய படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும். டிஎன்ஏ படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும்போது அவர்கள் கொண்டாடுவதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. படம் பார்த்துக் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நல்ல படம் எடுத்தால் நல்ல கருத்தை தான் சொல்லுவார்கள் என நம்புகிறேன். அப்பா இடத்தை நான் பிடிப்பேன் என்ற கால்குலேஷன் எல்லாம் இன்று போட முடியாது. என்னுடைய அப்பா உயிரோடு இருக்கும்போதே அதைத்தான் சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை நீ பின்பற்ற வேண்டாம்.

https://www.youtube.com/watch?v=Bom6TK_Gog4

தந்தை பற்றி சொன்னது:

உனக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்து. உனக்கு பிடித்த கதைகளை செய். அந்த படங்களை பண்ணு என்று சொல்லுவார். அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் எல்லாம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. இயக்குனர் பாலா சார் என்னுடைய குடும்பத்தில் ஒருவர். அவரிடம் எப்போதும் நெருக்கமாக தான் இருக்கிறேன். அவர் கதைக்கு நான் தேவைப்பட்டால் அவரே அழைப்பார். நாங்கள் நிச்சயம் படம் பண்ணுவோம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full