சுகர் டெடிக்கு இது தான் அர்த்தம், ஆனா புரியாம பலர் - வேதனையில் பப்லு ரித்திவிராஜ் சொன்ன விஷயம்

By subhashini · 3/6/2025

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பப்லு பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் வில்லன் ஆகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

பின் இவர் சித்தி, அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். இதனிடையே இவர் பீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். சில வருடங்களுக்கு முன் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு ஷீத்தலுடன் நட்பு ஏற்பட்டது. பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பிரித்விராஜ் அதை மறுத்தார்.

பிரித்திவிராஜ் பற்றிய தகவல்:

அதோடு நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் இதுவரை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொன்னார். இருவருக்கும் 30 வயது வித்தியாசம். அதற்கு பின் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள்.

பிரித்திவிராஜ்-ஷீத்தல்:

அதற்குப் பின் இருவரும் பிரிந்ததாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சீத்தல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் பப்லு தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பப்லு நடித்து இருந்த படம் ஏஸ். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த ஏஸ் படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

பிரித்திவிராஜ் பேட்டி:

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் பப்லு நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரித்திவிராஜிடம் சீத்தலுடன் காதல் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு பப்லு பிரித்திவிராஜ், சுகர் டெடி என்றால் என்ன? என்று பல பேருக்குமே புரியவில்லை. பாவம் என்ன செய்வது, ஒரு முறை என்னிடம் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை.

சுகர் டெடி இது தான் அர்த்தம்:

நான் ஒரு சின்ன அபார்ட்மெண்டில் தான் 20000 ரூபாய்க்கு வாடகை இருந்தேன். அப்படி இருக்கும்போது தான் சீத்தலை சந்தித்தேன். அவருடைய அப்பா ஆந்திராவில் காவல்துறை ஆணையராக இருக்கிறார். அம்மா ஒரு வழக்கறிஞர். அந்த பெண் ஒரு பெரிய கோடீஸ்வரி. என்னுடைய பணத்துக்காக அந்த பெண் வரவில்லை. என்னுடைய அழகுக்கும் அறிவுக்காகவும் தான் வந்தார். நான் அதிகபட்சமாக பணத்தை வைத்து காதலை வாங்கினால்தான் சுகர் டெடி என்று அர்த்தம். இது கூட தெரியாமல் என்னை சுகர் டெடி என்று சொல்கிறார்கள் என கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full