யாராவது ஒருத்தருக்கு நல்லது செய்யணும் - மனைவி லாட்டரியில் வென்றதை கொண்டாடிய அஜித் பட நடிகர்

By subhashini · 7/7/2025

நடிகர் பாலா-கோகிலாவுக்கு லாட்டரி அடித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்.

பாலா குறித்த தகவல்:

இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். பின் இவர் மருத்துவரான எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். அதன் பின் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து பேசி இருந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா பேசி இருந்தார்.

பாலா குடும்ப வாழ்க்கை:

இதை அடுத்து கடந்த ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை தனது பாலா மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பாலாவும் அவருடைய மனைவி கோகிலாவும் பேட்டி அளித்து இருந்தார்கள். அதில் பாலா, தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார்.

பாலா லாட்டரி:

அதோடு கோகிலாவும் தங்களின் திருமணம் எப்படி நடந்து என்றும் விளக்கமாக பேசி இருந்தார். அதற்கு பின் இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதோடு பாலா மீது அவரின் முன்னாள் மனைவி போலீசில் புகார் எல்லாம் கொடுத்து இருந்தார். அதை பாலா-கோகிலா இருவரும் சமாளித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பாலா மனைவி வாங்கிய லாட்டரியில் பணம் விழுந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலா வீடியோ:

அதாவது, பாலா மனைவி வாங்கிய லாட்டரியில் 25000 பணம் விழுந்து இருக்கிறது. இதை பாலா சோசியல் மீடியாவில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இது என்னுடைய அதிர்ஷ்டம். நமது அதிர்ஷ்டம். ஆசிர்வாசிக்கப்பட்டதாக உணர்கிறேன். இதுதான் முதல்முறையாக லாட்டரி டிக்கெட் வெல்வது
என்று கூறி பாலா பரிசு தொகையை கோகிலாவிடம் ஒப்படைக்கிறார். அதோடு இதை யாராவது ஒருவருக்கு நல்லது செய் என்றும் கூறுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full