அவரது வருத்தத்திற்கு இந்த ஒரு காரணம் தான் - ICUவில் சிகிச்சை பெற்று வரும் பாலாவின் இரண்டாம் மனைவி உருக்கமான பதிவு.

By Rajkumar · 11/3/2023

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு தொடர்பான நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய. கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர்.

நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார்.பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் அம்ருதாவை கடிந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த பாலா கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by 𝗦𝗢𝗢𝗥𝗔𝗝 𝗣𝗔𝗟𝗔𝗞𝗞𝗔𝗥𝗔𝗡 (𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟) (@soorajpalakkaran)

இதனிடையே நடிகர் பாலாவின் நண்பரான சுராஜ் பாலகார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாவின் உடல் நிலை குறித்து வீடியோ ஒன்றைபதிவிட்டார். அதில் பாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்

அதேபோல சிகிச்சைக்கு முன்னர் பாலா தன்னுடைய மகளை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் ,அவரது மனைவி, பாலாவின் ஆசையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் தயவு செய்து அவரது மகளை பாலாவிற்கு காட்டுங்கள் என்றும் அந்த வீடியோவில் சுராஜ் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பாலாவை சந்தித்தார் பாலாவின் முன்னாள் மனைவி.

இந்த நிலையில் பாலாவின் மனைவி எலிசபெத் தனது கணவரின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கொச்சி மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாலா தற்போது நலமாக இருக்கிறார், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. தான் நலமாக இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் பாலா கூறியுள்ளார். அவருடைய ஒரே வருத்தம் தனது உடல் நலம் குறித்து பரவி வரும் வதந்தி மட்டுமே. எனவே தயவு செய்து தேவையற்ற வதந்திகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full