கிப்டு தரேன்னு சொல்லி தாலி கட்டி விட்டார் - நடிகர் பாலா மனைவி கோகிலா சொன்ன பகீர் தகவல்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். பின் இவர் மருத்துவரான எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருந்தார்.
பாலா குறித்த தகவல்:
அதன் பின் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து நிறைய பேசி இருந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா, என்னுடைய அப்பா என்னை ரொம்ப நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும், எனக்கு நிறைய பொருட்களை வாங்கி தந்ததாகவும் பல பேட்டிகளில் கூறியிருந்தார். அது எதுவுமே உண்மை கிடையாது. அவரை நினைக்கும் போது, அவர் குடித்துவிட்டு என்னையும் என் அம்மாவையும் செய்த கொடுமை தான் ஞாபகம் வருகிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பாலா மூன்றாவது திருமணம் :
இதை அடுத்து கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை தனது பாலா மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பாலாவும் அவருடைய மனைவி கோகிலாவும் அளித்த பேட்டியில், நான் நான்காவது கல்யாணம் பண்ணிட்டேன் என்று சொல்கிறார்கள். எப்படி வேணாலும் வைத்துக்கொள்ளுங்கள்., ஆனால் சட்டப்படி கோகிலா என்னுடைய இரண்டாவது மனைவி. இந்த கல்யாணத்தில் நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறோம். சொர்க்கத்தில் வாழ்கிற மாதிரி எங்களுடைய வாழ்க்கை இருக்கிறது.
பாலா பேட்டி:
கோகிலா என்னுடைய மாமா பொண்ணு. எனக்கு அவளை மூன்று வயதில் இருந்து தெரியும். அவள் என்னை லவ் பண்ணுன விஷயம் எனக்கு தெரியாது. எங்க அம்மாவும் திருமணத்திற்கு ஒற்றுக் கொண்டார்கள். இவர் என் வாழ்க்கைக்கு வந்த பிறகு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. எங்களுக்கு சட்டபூர்வமாக கல்யாணம் நடந்தது மூன்று மாதத்திற்கு முன்னாடி தான். கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை எல்லாம் நகைக்கடை கிடையாது. நான் சனிக்கிழமை இரவே முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கடையை திறந்து தாலி வாங்கிட்டு வந்தேன். நான் தாலி கட்ட போறேன் இவங்களுக்கு தெரியவே தெரியாது என்றார் பாலா.
கோகிலா சொன்ன விஷயம்:
உடனே கோகிலா, கேரளா தாலி வேற மாதிரி இருக்கும், தமிழ்நாட்டு தாலி வேற மாதிரி இருக்கும். வீட்டுக்கு வந்து ஒரு கிப்ட் வாங்கி இருக்கேன் என்று சொல்லி சாமி கிட்ட கூட்டிட்டு போனாரு. அப்போ திடீர் என்று தான் என்னுடைய கழுத்தில் தாலி கட்டிவிட்டார். இது யாருக்குமே தெரியாது. திடீரென்று நடந்த கல்யாணம் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அதற்கு பாலா, நான் போன வருடம் ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கையாக இருந்த போது கோகிலா தான் ஒரு தாயாக பார்த்து கொண்டார். நான் தூக்கி வளர்த்த பிள்ளையை கல்யாணம் பண்ண ஒரு நெருடலாக இருந்தது. ஆனால், நான் ஹாஸ்பிடல் இருந்த பத்து நாளும் ஒரு தாயால் மட்டும் செய்யக்கூடிய அத்தனை வேலையும் எனக்காக அவள் பண்ணினாள். அப்போ தான் அவரை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனசு வந்தது என்று கூறியிருக்கிறார்.