கொரோனாவால் தங்கை கணவரை பறிகொடுத்த பாலசரவணன். ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

By Rajkumar · 7/5/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார்.

அதே போல நேற்று ஆட்டோகிராப் புகழ் கோமகன், பிரபல காமெடி நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிகர் பாலசரவணனின் தங்கை கணவர் கொரோனா தொற்றால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Bala_actor/status/1390352073212915713

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அன்பு நண்பர்களே... இன்று எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவுகூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவுசெய்து முகக்கவசம் அணிவீர்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full