அந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்ததே பிக் பாஸ் தான் - நடிகர் பரணி ஓபன் டாக்

By subhashini · 4/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 30 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.

பிக் பாஸ் 9:

இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலேயே சுவர் ஏறி தப்பிக்க முயன்ற நடிகர் பரணி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், அங்கம்மாள் என்று ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது அம்மா மகன் கதை. நியூயார்க் திரைப்பட விழாவில் படத்துக்கு விருது தந்திருக்கிறார்கள்.

பரணி பேட்டி:

இங்கு அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி 2 படம் வரை இருக்கிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. பொழுது விடிந்தால் புதுசாக 10 பேரை சந்தித்து நல்லதாக நாலு விஷயம் பேசினோமா வந்தமா இருப்பவன். அதிலும் பார்ப்பவர்கள் பழகினவர்கள் என்று எல்லோரையும் நம்பவும் செய்வேன். என்னை போய் வாயை திறந்தால் பொய், அதுவும் அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு பேசிக்கொண்டு திரிகிறவங்களோட இருக்கன்னு சொன்னா? எப்படி இருப்பேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சொன்னது:

அந்த நிகழ்ச்சி பத்தி தெரியாமல் கமல் சார் வர சோ என்று கிளம்பிப் போனேன். ரெண்டு மூணு நாளிலேயே இங்க இருக்க முடியாதுன்னு தெரிஞ்சது. வெளியில் போகணும்னு சொன்னேன். அவர்கள்
விடவில்லை. அதனால் மன அழுத்தம் அதிகமாகி டென்ஷன் அதிகமாகி விட்டது. அதனால் தான் அப்படி பண்ணேன். என் பாட்டுக்கு நடிப்பு பக்தி என்று போய்க்கொண்டிருக்கிறேன். இந்த சீசனிலும் என்னை மாதிரி செட் ஆகவில்லை என்று ஒரு நபர் கிளம்பி இருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு விஷயம் பிடிக்காமல் அதில் இருந்து வெளியே வந்த பிறகு அதைப்பற்றி எதுக்கு யோசிக்கணும். நிகழ்ச்சிக்கு போறேன்னு சொன்னாலே உன் வாழ்க்கை உன் முடிவு என்று கையெடுத்து கும்பிட்டு அனுப்பி விடுவேன் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full