தமிழ் சினிமாவின் இளம் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத் 1984ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். பரத்திற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ப்ரீத்தி. தமிழில் பாய்ஸ் என்ற சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் நடித்தார்.

Advertisement

அதன்பின்னர், செல்லமே, காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார்.சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பரத், ஒரு சர்வதேச டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த ‘தி 4 பீப்பில்’ படம் 2004ல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற ஒரு பல் மருத்துவர் ஆவார்.பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

Advertisement

கடந்த 5 வருடங்களாக குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த நடிகர் பரத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் நடிகர் முதன் முறையாக தனது குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement