பெரிய ஆளுக்கு பினாமி, வெளிநாட்டுல இருந்து பணம் வருது - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த பிளாக் பாண்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் பிளாக் பாண்டி. இதை தொடர்ந்து இவர் ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார் பிளாக் பாண்டி. சினிமாவில் காமெடியனாக இருக்கும் இவர் நிஜத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கஷ்டப்படும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். தற்போது பிளாக் பாண்டி அவர்கள் இலங்கையின் மலை பகுதியில் இருந்து நான்கு ஏழை மாணவர்களை கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.
இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அவர்கள் படிப்பதற்கான எல்லா உதவிகளையும் உதவும் மனிதம் என்று அறக்கட்டளை மூலம் செய்து தந்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பாண்டி, நான் இலங்கைத் தமிழர். என்னுடைய சொந்தக்காரர்கள் அங்கே இருக்கிறார்கள். அதனால் தான் அடிக்கடி பாண்டி இலங்கை போயிட்டு வருகிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில், இலங்கை தமிழர்களிடம் இருந்து பாண்டிக்கு நிறைய பணம் வருதுன்னு சொல்றாங்க. youtube களில் இந்த மாதிரி கன்னா பின்னான்னு வர தகவல்களுக்கு எல்லாம் ஒரு விஷயத்தை சொல்லிக்கலாம் என்று நினைக்கிறேன்.
பிளாக் பாண்டி குறித்த தகவல்:
முடிந்த உதவியை நாலு பேருக்கு செய்யலாம் என்று நான் கனா காணும் காலங்கள் முடிந்த சமயத்தில் தான் நினைத்தேன். அப்போ லண்டனில் இருந்து ஒரு ரசிகர் பேசினார். இலங்கை தமிழர் அந்த சீரியல் பத்தி பேசி எனக்கு அறிமுகமானார். நண்பராக அறிமுகம் ஆகி ஒரு கட்டத்தில் நெருக்கமாகிவிட்டார். சினிமாவை தாண்டி எங்களுக்குள் சில நல்ல குணங்கள் ஒத்து போனது. உங்களுக்கு இருக்கிற பிரபலத்தை வைத்து ஏதாவது செய்யலாம்னு அவர் சொன்னது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. உடனே அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்கள் மூலம் உதவி என்று கேட்டவர்களுக்கு சின்ன அளவில் உதவி செய்ய ஆரம்பித்தோம். அந்த லண்டன் ரசிகர் மூலமாக இலங்கையில் இருந்து மேலும் சில நண்பர்கள் கிடைத்தார்கள். இங்கு என்னுடைய நட்பு வட்டத்தில் உதவுகிற குணம் கொண்டவர்கள் சில பேர் சேர்ந்தார்கள்.
பிளாக் பாண்டி பேட்டி:
அப்பதான் உதவும் மனிதம் என்ற அறக்கட்டளையை தொடங்கினோம். என் சொந்த காசை கொடுத்த வரைக்கும் நான் யாரிடமும் கணக்கு சொல்லத் தேவையில்லை. ஆனால், பல இடங்களில் உதவி வந்தவுடன் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கணும் என்று அறக்கட்டளையைப் பதிவு செய்து அரசுக்கு வரவு செலவு காட்டுவதற்கு பக்காவாக டாக்குமெண்ட் எல்லாம் பண்ணி வைத்தோம். இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் எங்கள் மூலம் பலனடைந்து இருக்கிறார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால், இப்ப காலம் ரொம்பவே டேன்ஜராக இருக்கு. நன்றாக சம்பாதித்து அடுத்தவனுக்கு ஒன்னும் செய்ய மாட்டான்னு திட்டுவார்கள். ஏதாவது செஞ்சாலும் செய்ய மனசு இல்லாதவங்களை அது உறுத்தும். எதையாவது சொல்லி அதை தடுத்து நிறுத்தலாமா என்று நினைப்பார்கள்.
https://www.youtube.com/watch?v=nJJejYaIUwA
சர்ச்சைகளுக்கு பதிலடி:
இவனுக்கு வருமானம் என்னன்னு தேடுகிறார்கள். என்னென்னமோ என்னை பற்றி எல்லாம் பேசுகிறார்கள். பாலா விஷயம் உங்களுக்கே தெரியும். சர்வதேச கைக்கூலி என்ற அளவுக்கு பாலா செய்த உதவி போயிட்டு இருக்கு. பாலா விஷயம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், என் விஷயத்தில் இதுதான் நிலவரம். இதை சொல்லிட்டா பேசாம இருப்பாங்களா என்று தான் நான் சொன்னேன். மேலும், இப்போது நான் ரெண்டு மூணு தடவை இலங்கை போய்விட்டு வந்ததிலேயே அங்கேயும் கஷ்டப்படுகிற தமிழர்கள் பற்றி தெரிய வந்தது. ரெண்டு நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உதவ முன்வந்த சில கல்வி நிறுவனங்களில் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானத. உதவும் மனிதம் நிறுவனம் இலங்கையிலும் சீக்கிரம் தொடங்க இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.