தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ஏற்பட்ட அடுத்தடுத்த துயரம் - யார் யார் தெரியுமா?

By subhashini · 23/10/2025

இந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த பழம் பெரும் நடிகையாக இருந்தவர் மனோரமா. திரையுலகினராலும், ரசிகர்களாலும் “ஆச்சி” என அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவர் நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். மேலும், இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை டாக்டர் நடிப்புத் திறமைக்கு வாங்கி உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.

இதனால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதோடு நடிகை மனோரமா தமிழ் மொழி மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவருடைய நடிப்பால் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். இவரின் இழப்பு தமிழ் சினிமா உலகில் பேரதிர்ச்சியாக இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவருமே தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர்.

மனோரமா மகன் இறப்பு:

இவருடைய மனைவியின் பெயர் தனலட்சுமி. இவருக்கு ராஜராஜன், அபிராமி, மீனாட்சி, என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக இன்று பூபதி காலை 10:40 மணியளவில் இயற்கை எய்திருக்கிறார். இவருடைய இறுதி சடங்கு நாளை மதியம் நடைபெற இருக்கிறது. அதே போல் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலம் ஆகி இருக்கிறார்.

சபேஷ் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேசன் (சபேஷ்) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று மதியம் 12.15 மணி அளவில் காலமானார். தற்போது அவருக்கு வயது 68. சகோதரர் முரளி உடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் திரைப்படங்களுக்கு சபேஷ் இசையமைத்து வந்தார்.

சபேஷ் மறைவு:

சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா எனும் மகள்களும் கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது. சபேஷின் இறுதி சடங்குகள் அவரது இல்லமான எண், 151, 18வது தெரு, சவுத்ரி நகர், வளசரவாக்கம், சென்னை என்ற முகவரியில் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு நடைபெற்று, பின்னர் அவரது உடல் பிருந்தாவனம் நகர் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படும். தற்போது இவர்கள் இருவரின் இறப்பு தமிழ் சினிமாவில் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full