நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு - பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லும் நடிகர் போஸ் வெங்கட்

By subhashini · 15/11/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர்ஆவார். இயக்குனர், 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல், தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருந்தார். இவர் கடைசியாக கங்குவா, விடுதலை 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் போஸ் வெங்கட், அரசியல் என்பது மக்களுக்கான சேவை. மக்கள் சேவை செய்ய நடிகர்கள் மட்டும் இல்லாமல் எந்த துறையை சேர்ந்தவர்கள் வேண்டாலும் வரலாம். ஆனால், உண்மையில் அவர்கள் சேவை மனப்பான்மையுடன் வருகிறார்களா? என்பது தான் கேள்வி. அரசியலுக்கு வருபவர்கள் மக்களிடம் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்கள்.

போஸ் வெங்கட் பேட்டி:

அவர்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை பற்றி எல்லாம் பார்க்க வேண்டும். அரசியலுக்கு தகுதியானவர்கள் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அது நடிகர்களாக இருந்தாலும் சரி எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி தகுதி இல்லாதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை எல்லோருக்குமே தெரிந்திருக்கும். உலக அளவில் அவர்களுடைய முகமும் மக்களுக்கு தெரிந்திருக்கும்.

அரசியல் பற்றி சொன்னது:

அது தவிர தகுதிகளாக என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை உலக அளவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. வெவ்வேறு பெயர்களில் நடக்கிறது. கலாச்சாரத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதை தடை செய்வது நல்லது தான். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அதை நாம் கவனிக்க வேண்டும். டிவியில் சென்சார் இல்லை என்பதற்காக எல்லாத்தையும் காண்பிக்க முடியாது.

View this post on Instagram

A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)

பிக் பாஸ் பற்றி சொன்னது:

கட்டிப்பிடிப்பது, குறைந்த ஆடை போடுவது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகளை எல்லாம் காண்பிக்க கூடாது. பிக் பாஸ் மட்டும் இல்லை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதை தடை செய்வது நல்லது தான். அதோடு நடிகர், நடிகைகள் மக்களுக்கானவர்கள். அவர்களை இழிவாக பேசுவது உங்களுக்கு தான் இழப்பு. அவர்கள் ஆடிப் பாடுவதெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்துவதற்கு தான். அதனால அவர்களை இழிவாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full