தலைவன் ரசிகனை முட்டாளாக்க கூடாது, அறிவாளியாக்க வேண்டும்- 'கங்குவா' பட விழாவில் போஸ் வெங்கட் சொன்னது

By ·

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் போஸ் வெங்கட் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கங்குவா படம் :

இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதியே இந்த படம் திரையரங்களில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது.

படம் குறித்த தகவல்:

பின் இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார். போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இசை வெளியீட்டு விழா:

இந்நிலையில் கங்குவா படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட், ஒரு தலைவன் ஐஏஎஸ், போலீஸ், எழுத்தாளர், மருத்துவர் என்று எங்கிருந்தாலும் வரலாம். ஆனால், ஒரு தலைவனுடைய அடிப்படை ரசிகனை முட்டாளாக வைத்திருக்க கூடாது. அவனை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். அவன படிக்க வைக்கணும், அறிவ வளர்க்கணும்.

போஸ் வெங்கட் சொன்னது:

அதற்குப் பிறகுதான் அரசியலுக்கு வரணும் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயை தாக்கித் தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். விஜய் அவர்கள் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து சமீபத்தில் தான் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தார். தற்போது விஜய்னுடைய மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை