இனி என் பெயர் சாம்ஸ் இல்லை, காரணம் - பிரபல நடிகர் வெளியிட்ட அதிரடி வீடியோ, என்ன தெரியுமா?

By subhashini · 3/10/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாம்ஸ். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தின் மூலம் தான். இந்த படத்தில் இவர் ஜாவா சுந்தரேசன் என்ற ரோலில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு இவரை பலருமே ஜாவா சுந்தரேசன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அந்தளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரீச்சானது. மேலும், இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இவர் சாம்ஸ் என்ற பெயரில் தான் நடித்துக் கொண்டு வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சாம்ஸ் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் தன்னுடைய பெயரை ஜாவா சுத்தரேசன் என்று மாற்றி இருக்கிறார்.

சாம்ஸ் குறித்த தகவல்:

அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தின் இயக்குனர் சிம்பு தேவனை சாம்ஸ் நேரில் சந்தித்து ஜாவா சுத்தரேசன் பெயரை தான் வைத்துக் கொள்வதற்கு அனுமதியும் கேட்டிருக்கிறார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சாம்ஸ், அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் ஒரு செய்தி. என்னுடைய பெயர் ஸ்வாமிநாதன். திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக சாம்ஸ் என்று மாட்டிக்கொண்டேன். சாம்ஸ் என்ற பெயரில் தான் நான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்தேன்.

சாம்ஸ் பேட்டி:

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வந்த அறை எண் 305 கடவுள் என்ற படத்தில் நான் நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் ரொம்பவே புகழ்பெற்றது. அந்த பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைக்கிறார்கள். எங்கு சென்றாலும் ரசிகர்கள் ஜாவா சுந்தரேசன் என்று தான் அழைக்கிறார்கள். மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம் என்று ஏற்று என்னுடைய பெயரை ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டேன்.

https://www.youtube.com/watch?v=Vw2N7AaKIuQ

பெயர் மாற்ற காரணம்:

எனக்கு கிடைத்த இந்த பெயருக்கும் புகழுக்கும் பெருமைக்கு காரணம் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சிம்புதேவன் தான். முறைப்படி அவரிடம் அனுமதி வாங்கி அவரின் வாழ்த்துகளோடு இனி நான் ஜாவா சுந்தரேசன் என்று என்னுடைய திரை பயணத்தை தொடங்க இருக்கிறேன். இந்த நல்ல தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full