தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சார்மி கவுர். இவர் தனது 15 வயதில் இருந்தே படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு நீ நடித்து காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய சில படங்களில் நடித்தார். மேலும், நடிகை சார்மி தெலுங்கு சினிமாவில் தான் பட்டைய கிளப்பினார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமீப காலமாக நடிகை சார்மி அவர்கள் படங்களில் நடிப்பது இல்லை. தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தயாரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்தியாவிற்கு வந்த கரோனா வைரசை வரவேற்கும் பாணியில் நடிகை சார்மி அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் . உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது.

Advertisement

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் மூவாயிரத்துக்கும் மேல் உயிரிழந்து உள்ளார்கள். இந்தியாவில் கேரள மாநிலத்தில் மூன்று பேருக்கு இந்த கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டு பேர் இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லிக்கு திரும்பிய ஒருவரும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் இந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இது பரிசோதனையில் உறுதி ஆகி தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த வைரஸ் இந்தியாவில் பரவி இருப்பதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை சார்மி அவர்கள் இந்தியாவிற்கு வந்த இந்த கரோனா வைரஸை வெல்கம் பண்ணும் பாணியில்டிக் டாக் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ஆல் தே பெஸ்ட் நண்பர்களே. உங்களுக்கு தெரியுமா? இந்த கரோனா வைரஸ் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து விட்டது.

Advertisement

இந்த தகவலை நான் செய்தியின் மூலம் தெரிந்து கொண்டேன். இறுதியாக இந்த கரோனா வைரஸ் இந்தியாவிற்கும் வந்துவிட்டது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே பலரும் சார்மியை விமர்சிக்க தொடங்கினார். இதனால் நடிகை சார்மி அவர்கள் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கம் செய்துள்ளார். பின் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisement
Advertisement