சைரன் வைத்த வாகனம், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் - சதுரங்க வேட்டை ஸ்டைலில் நடிகரை ஏமாற்றிய கும்பல். போலீசில் புகார் (இத்தனை கோடி அம்பேல்)

By Rajkumar · 22/3/2022

இரிடியம் மோசடி கும்பலிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழந்து விட்டதாக பிரபல நடிகர் விக்னேஷ் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் விக்னேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னதாயி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் கிழக்கு சீமையிலே, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, என்னை தாலாட்ட வருவாளா,சூரி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்னேஷ் அவர்கள் இரிடியம் மோசடி கும்பலிடம் ஏமாந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1803 ஆம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னன்ட்டால் அவர்கள் கண்டுபிடித்தார். பின் இந்த இருடியம் என்ற பெயரில் தொடர்ந்து பல இடங்களில் மோசடி நடைபெற்று கொண்டு இருந்தது. இதில் மிக பிரபலமான பல தொழிலதிபர்கள் கூட கோடிக்கணக்கில் ஏமாந்து இருக்கிறார்கள். இது வாடிக்கையாகவே நிகழ்ந்து வருகிறது.

போலீசில் நடிகர் விக்னேஷ் அளித்த புகார்:

இந்நிலையில் தற்போது திரைப்பட பிரபல நடிகர் விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் 1.81 கோடி ரூபாய் இழந்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடிகை விக்னேஷ் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது, 30 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து, அதன் பிறகு சொந்தமாக தொழிலும் செய்து வருகிறேன். எனது கடையில் வாடகைக்கு இருப்பவர் ராம் பிரபு. இவர் எப்போதும் சைரன் வைத்த வாகனத்தில் துப்பாக்கி ஏந்தி, சபாரி உடை அணிந்த வீரர்களுடன் தான் வலம் வருவார். அதனால் நான் இவரை பார்த்து விஐபி என்றே நினைத்தேன். பின் இவருடன் நட்பு ரீதியாக பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

இரிடியம் மோசடி கும்பல்:

அப்போது அவரிடம் இந்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரித்தேன். அதற்கு அவர், இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், மத்திய அரசுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு அதை விற்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அதன் மதிப்பு 3 லட்சம் கோடி என்றும் அதனால் தான் தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களை மத்திய அரசு வழங்கி இருப்பதாகவும் சொன்னார். மேலும், இது தொடர்பாக இரண்டு முறை நடந்த கூட்டங்களில் நானும் கலந்து கொண்டேன். அதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இரிடியம் மோசடியில் ஏமாந்த நடிகர்:

இவை எல்லாம் பார்க்கும்போது ராம் பிரபு கூறியது உண்மை என்று என்னை நம்ப வைத்தது. இதை தொடர்ந்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் 500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்று நம்பிக்கையூட்டும் வகையில் ராம் பிரபு பேசினார். அவரின் பேச்சை நம்பி என்னுடைய வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் 1.81 கோடி ரூபாயை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். பின் ஒரு முறை நேரில் சந்தித்த போது 500 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரி மூலம் வருகிறது. வந்தவுடன் தகவல் சொல்கிறேன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.

மோசடி செய்த ராம் கைது:

ஆனால், அதற்கு பிறகு எந்த தகவலும் வரவில்லை. அதோடு இது எனக்கு மட்டும் இல்லை என்னை போல நிறைய பேரிடம் இது போல் பேசி ஏமாற்றி அவர் பணம் வசூலித்து இருப்பது தெரியவந்தது. பிறகு அவர் மோசடி பேர்வழி என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் காவல்துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. என்னைப்போல 500 பேரிடம் ராம் பிரபு பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரிந்தது. அவர் மீதும் அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி பிரபல நடிகர் இரிடியம் மோசடியில் ஏமாந்து இருந்த தகவல் தற்போது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full