7வயதில் பிரபல நடிகர் காமராஜருடன் எடுத்த புகைப்படம் - 90ஸ் கிட்ஸ் கண்டுபுடிச்சிட்டு இருப்பீங்களே ?

By Siva · 7/3/2023

மிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் செந்தில், கவுண்டமணி காமெடிக்கு பின்னர் வந்த எத்தனையோ 90ஸ் காலகட்ட காமெடி நடிகர்களின் காமெடிகளை தற்போதும் மறக்க முடியாது. வடிவேலு விவேக்கை அடுத்தது தமிழ் சினிமாவில் வந்த சார்லி, தாமு, சின்னி ஜெயந்த், வையாபுரி போன்ற பல காமெடி நடிகர்களின் காமெடி பற்றி 90ஸ் ரசிகர்கள் மட்டுமே அறிவர். அப்படி நீங்கள் 90ஸ் ரசிகராக இருந்தார் இந்நேரம் இந்த புகைப்படத்தில் காமராஜருடன் இருக்கும் சின்னி ஜெயந்தை கண்டுபிடித்து இருக்கணுமே.

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் சின்னி ஜெயந்த்தும் ஒருவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பல குரலில் பேசும் கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகர் சின்னி ஜெயந்துக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சித்தார்த் ஜெயநாத், ஸ்ருஜன் ஜெய்நாத் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு தான் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். அதிலும் முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 75 ரேங்கில் அவர் தேர்ச்சி பெற்று இருந்தார்.

இதுகுறித்து பேசிய சின்னி ஜெயந்த் 'ஒரு படத்தில் கமிட் ஆனதிலிருந்து அந்த படத்தின் ரிலீஸ் வரைக்கும் நாங்கள் எதிர்கொள்ளும் பென்ஷன் எங்களுக்குத்தான் தெரியும்.அந்த டென்ஷனை எங்கள் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதேபோல சினிமாவிற்குள் வர வேண்டும் என்கிற எண்ணம் என்னுடைய பிள்ளைகளுக்கும் இல்லை. ஸ்ருதன் ஐஏஎஸ் தேர்வில் தேர்வான தகவலை அறிந்து ரஜினி சார் கமல் சார் என்று பல்வேறு பிரபலங்கள் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்கள்.

நம்முடைய வெற்றி நம் குடும்பத்தையும் தாண்டி பலருக்கு மகிழ்ச்சியை தருகிறது என்ற விஷயம் அரிதானது. அந்த பெருமையை ஸ்ருதன் எங்களுக்கு கொடுத்திருக்கிறான். சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் பிள்ளைகள் விளையாட்டு அல்லது அரசு உயர் பதவி என்று ஏதாவது ஒரு துறையில் பெரிய நபர்களாக உருவாக வேண்டும் என்று கூறி இருந்தார்.

நடிகர் சின்னிஜெயந்த் அவர்கள் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நிறைய ஆர்வம் கொண்டவர். உண்மையான தெய்வ வழிபாடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர்.அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தை சென்று வழிபடுவது தான் இவரின் வழக்கம், அதிலும் இந்து முஸ்லிம் கிறிஸ்ட்டின் என்று எந்த மத பாகுபாடு பார்க்காமல் அனைத்து கோவிலுக்கும் சென்று வழிபடுவார்.

behindtalkies AMP · Quick view
View full