வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் மற்றும் முரளிக்கு இப்படி ஒரு சொந்தமா ?

By Rajkumar · 11/4/2020

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.

மேலும், நடிகர் பாலாஜி அவர்கள் விஜய்யின் பிகில் படத்திலும் , தனுசின் அசுரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் வெப்ஸ் சீரியசிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் டேனியல் பாலாஜியிடம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான முரளி உங்களுடைய அண்ணன் என்று சொல்கிறார்கள்.

இது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லையே என்று கேட்டுள்ளார். அதற்கு டேனியல் பாலாஜி அவர்கள் கூறியிருப்பது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். நாங்க தெலுங்கு காரர். முரளி அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆனால், என்னுடைய அம்மாவும், முரளி உடைய அம்மாவும் அக்கா தங்கைகள். அந்த வகையில் முரளி அவர்கள் என்னுடைய அண்ணன் என்று கூறினார்.

https://youtu.be/c1a7huaebys
வீடியோவில் 14 : 25 நிமிடத்தில் பார்க்கவும்

இதனைத் தொடர்ந்து தொகுப்பாளர் நடிகர் முரளியின் மகனுக்கும், விஜயின் மாமா மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்து நீங்களும், விஜய்யும் பேசியிருக்கிறீர்களா?என்று கேட்டுள்ளார். அதற்கு டேனியல் பாலாஜி அவர்கள் கூறியது, நான் விஜய் அண்ணாவுடன் பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நிறைய விஷயங்களை பேசுவோம்.

அப்படி ஒரு நாள் நாங்கள் இருவரும் நடனம், படங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது விஜய் அண்ணா நம்ம ரெண்டு பேரும் சொந்தக்காரர்கள் ஆகப் போகிறோம் தெரியுமா என்று கேட்டார். அதற்கு நான் என்ன சொல்றீங்க புரியல அண்ணா என்று கேட்டேன். அதற்கு விஜய் அண்ணா ஆமாங்க, உங்க அண்ணன் முரளி பையனும், என் மாமா பொண்ணும் காதலிக்கிறார்கள்.

அது வீட்டில் பேசி முடிவாகி இருக்கு என்று சொன்னார். உடனே நான் அப்படியா அண்ணா நல்ல விஷயம் தான் என்று சொன்னேன். பிறகு நிச்சயதார்த்த சமயத்தில் நான் வெப்ஸ் சீரிஸ் ஷூட்டிங்காக வெளியே சென்று இருந்தேன். அதனால் என்னால் வர முடியாமல் போனது என்று கூறினார். தற்போது இப்படி இவர் கூறிய வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full