இதான் நட்பு - காமெடி நடிகருக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ள தளபதி. அவரே சொன்ன விஷயம்

By subhashini · 22/12/2023

விஜய் குறித்து நடிகர் தாமு பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் தாமு. இவர் வானமே எல்லை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், பிரசாந்த், சரத்குமார், பிரபு தேவா, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் இவர் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இதுவரை தாமு அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மிமிக்ரி கலைஞர் ஆவார். பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அதன் பின் 7 ஆண்டுகளாக தாமு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமிடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

தாமு குறித்த தகவல்:

அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடன் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார் தாமு. அந்த வகையில் இவர் கல்வித்துறையில் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதிலும் இவர் பேசும் பேச்சுக்களை கேட்டு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களே கண்கலங்கி அழுகிறார்கள்.

தாமு பேசிய வீடியோ சர்ச்சை:

இப்படி ஒரு நிலையில் ஆரணியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடிகர் தாமு, மாணவர்கள் முன்பு உரையாற்றினார். அப்போது தாமுவின் பேச்சை கேட்டு மாணவர்கள் கதறி அழுதனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பலரும் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் இது தான் ஹாட் டாபிக்கே. சில வாரங்களாக தான் இந்த பிரச்சனை ஓய்ந்து இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து தாமு பேசி இருக்கும் பழைய வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

தாமு கலந்து கொண்ட போட்டி:

அதில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 40 நாடுகள் கலந்து கொண்ட மிமிக்ரி போட்டி நடைபெற்றது. நான் ஜுராசிக் பார்க் டைனோசர் மாதிரி மிமிக்ரி செய்து முதல் பரிசு பெற்றேன். அதற்கு என்னை தயார்படுத்தியது என்னுடைய நண்பன் தான். ஜுராசிக் படத்தில் டைனோசர் சவுண்டை மட்டும் தனியாக எடிட் பண்ணி, இதை பாரு வித்தியாசமாக இருக்கு. இதை காதில் போட்டுக் கொண்டு திரும்பத் திரும்ப கேட்டு பண்ணு என்று சொன்னான். முதலில் இது சரியா வருமா? என நான் நினைத்துக் கொண்டே இருந்தேன்.

View this post on Instagram

A post shared by Arun Raja (@arun_singleboy7)

விஜய் குறித்து சொன்னது:

அவன் வரும் என்று எனக்கு ஆதரவு கொடுத்தான். நானும் அவன் சொன்ன மாதிரி ஜெனிவா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். இன்னைக்கு நானும் வெற்றி பெற்றேன். அவனும் வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் வேற யாரும் இல்லை என்னுடைய நண்பன் இளைய தளபதி விஜய் தான் என்று கூறியிருக்கிறார். மேலும், தாமுவும், விஜய்யும் இணைந்து நாளைய தீர்ப்பு, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், கண்ணுக்குள் நிலவு, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, கில்லி, போக்கிரி, வில்லு போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full