தனுஷின் 50வது படம் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு- இயக்குனர் யார் தெரியுமா?

By subhashini · 5/7/2023

தனுஷின் ஐம்பதாவது படம் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி.

தனுஷ் திரைப்பயணம்:

இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை சம்யுக்தா தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

கேப்டன் மில்லர் படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் 1930 காலத்தில் இருந்த மதராஸ் மாகாணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

தனுஷின் ஐம்பதாவது படம் :

இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, நடிகர் தனுஷின் ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவே ஏற்கனவே போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, அபர்ணா முரளி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல் :

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்க இருக்கிறது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்து இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு தனுஷின் ஐம்பதாவது படத்தின் போஸ்டரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full