ரிவ்யூவ நம்பாதீங்க, படம் பார்த்த நண்பர்களிடம் கேட்டு பாருங்க - விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் கொடுத்த பதிலடி
ரிவ்யூவ் பற்றி நடிகர் தனுஷ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் தனுஷ் தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குபேரா படம் நல்ல வசூலை செய்தது. தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் திரைப்பயணம்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தனுஷ் சொன்னது:
இதில் பேசிய தனுஷ், படம் 9 மணிக்கு ரிலீஸ் என்றால் 12 மணிக்கு மேல தான் ரிவியூஸ் எல்லாம் வரும். ஆனால், ஒரு சில ரிவியூஸ் எட்டு மணிக்கு அதாவது, படம் ரிலீஸ்க்கு முன்னே வரும். அப்படி வரும் ரிவியூஸை எல்லாம் நம்பாதீங்க. நீங்கள் படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள். இல்லை உங்கள் நண்பர்கள் படத்தை பார்த்து என்ன சொல்றாங்கன்னு பாருங்க.
https://www.youtube.com/watch?v=bCzMWFdjjQA
விமர்சனம் பற்றி சொன்னது:
சினிமாவை நம்பி பலபேர் இருக்கிறார்கள். பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு. அதனால் எல்லோருடைய படமும் ஓடணும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. சரியான விமர்சனங்களை பார்த்து அந்த படங்களை பார்க்கலாமா? இல்லையா? என்று நீங்கள் தான் முடிவு பண்ணனும். எல்லோருக்கும் இட்லி கடை படம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்