சினிமாவில் என்னுடைய 2வது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன் - கல்லூரி விழாவில் நடிகர் தனுஷ் சொன்னது

By subhashini · 28/2/2026

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிகர் தனுஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 'வேல்ஸ் நட்சத்திரா 2026' என்ற கலாச்சார விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். 140 கல்லூரிகளை சேர்ந்த 1150 மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் ஐந்து லட்சம் பரிசு தொகை, கோப்பைகள், பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. முதல் நாளில் இயக்குனர் பிரேம்குமார், டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன், கென் கருணாஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசீர்வாதமாக நினைத்து அதை தக்க வைத்துக்கொள்ள இரவும் பகலும் பாடும் பாடுபட வேண்டும்.

வேல்ஸ் பல்கலைக்கழகம்:

எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு உண்டு. என்னுடைய முதல் படம் துள்ளுவதோ இளமை இங்க தான் எடுத்தோம். அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூல்ஸ் காலால் அடி வாங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்வில் சிறந்த நாட்களாக அமையும்.
சினிமா துறையில் 25 ஆண்டுகள் என்பது குறைவு. தற்போது என் திரைப்பயணத்தில் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்.

தனுஷ் பேசியது:

பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்க்கையில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டுமே நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும். இதை வாழ்வில் பின்பற்றுங்கள். என்னுடைய ப்ரீ டைமில் நான் புத்தகங்களை படிப்பேன். படங்கள் பார்ப்பேன். இல்லையென்றால் என் மகன்களோடு விளையாடுவேன். இடைவெளியே அபூர்வமாக தான் கிடைக்கும். கிடைத்தால் இது மூன்று தான் செய்வேன்.

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

சினிமா பற்றி சொன்னது:

மேலும், என்னை நான் ஒரு 'workaholic' என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி தான். எனக்கு வேலை செல்லும் உணர்வே இருக்காது. காலையில் போகும் போதே ஜாலியாகத்தான் போவேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full