தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு : சென்னை குடும்ப நல நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு - என்ன தெரியுமா?

By subhashini · 27/11/2024

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கிற்கு நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருந்து வந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே இறுதிவரை நன்றாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 18 ஆண்டு காலமாக சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா.

இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா-தனுஷின் இந்த முடிவு பலருக்கும் பேர் அதிர்ச்சியை தந்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து இருந்தார்கள். ஆனால், அதில் ஒரு பலனும் இல்லை. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனுஷ் படங்களை இயக்குவது, நடிப்பது, தயாரிப்பது என்று பிசியாக இருக்கிறார்.

பிரிவுக்கு பின் தனுஷ்-ஐஸ்வர்யா:

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

விவாகரத்து மனு தாக்கல்:

சமீபத்தில் தான் இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி சுபா தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜர் ஆகி இருந்தார்கள். அப்போது விசாரணையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதை அடுத்து நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் இருவருமே கையெழுத்து போட்டு இருன்ஹர்கள். இந்த விவாகரத்து வழக்கினுடைய தீர்ப்பை வரும் 27ஆம் விவாகரத்து தள்ளி வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து இருந்தார்கள்.

நீதிபதி தீர்ப்பு:

இந்த நிலையில் இன்று தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்து இருக்கிறது. அதில், இந்த வழக்கில் இருவருக்குமே விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்த இவர்களுடைய திருமணத்தை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full