தனுஷ் என் மகன் என்று வழக்கு தொடர்ந்த கதிரேசனின் உடல்நிலை தற்போது மோசமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து கொண்டு வருகிறார். தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய மகன் என்று சொல்லி கதிரேசன் தம்பதியர் நீதிமன்றத்தை நாடி இருக்கும் தகவல் ஏற்கனவே அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் மூத்த மகன் கலையரசன். இவர் பிளஸ் 1 படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இவர்கள் சினிமாவில் நடித்து வரும் தனுசை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் கதிரேசன் தம்பதியினர்.

Advertisement

தனுஷ் மீதான வழக்கு:

இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கதிரேசன் ஜீவானந்தம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். பின் இந்த விசாரணையின் போலியான ஆவணங்களை தனுஷ் தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்கள் கதிரேசன் தம்பதியினர். அதில், நடிகர் தனுஷ் என் மகன் என உரிமை கோரி நடந்த வழக்கில் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

தனுஷ் வழக்கு குறித்த விவரம்:

இதை அடுத்து தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய அந்த சான்றிதழ் மதுரை மாநகராட்சி அனுப்பப்பட்டது. இதனை அடுத்து தனுஷ் தரப்பில் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவில் இருக்கும் கதிரேசன் நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கதிரேசனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

கதிரேசன் உடல்நிலை :

தற்போது கதிரேசன் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் கதிரேசன் தன்னுடைய வழக்கின் விசாரணைக்காக கொடுத்த மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று கதிரேசனின் மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை ரத்தினவேலிடம் கோரிக்கை வைத்து மனு அளித்திருக்கிறார்கள். இதனை அடுத்து வழக்கறிஞர் டைட்டஸ் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதில் அவர், நடிகர் தனுஷின் அப்பா கதிரேசன் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது.

Advertisement

வழக்கறிஞர் அளித்த பேட்டி:

ஆகவே, கதிரேசனின் உயிர் ஆபத்து ஏற்பட இருக்கும் நிலையில் இருப்பதால் அவருடைய டிஎன்ஏவை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறோம். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவருடைய அங்க அடையாளத்தை லேசர் மூலம் அளித்து இருந்தார்; பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை எல்லாம் தவறாக தாக்கல் செய்திருந்தார். எனவே தனுஷ் உடைய பெற்றோர் கதிரேசன்- மீனாட்சி ஆகியோர் தான் என்பதை அவர் ஆவணங்கள் உறுதி செய்திருக்கின்றன. எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசன் பிரச்சனை அல்ல. இப்படியே எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய குரல் தான் இது என்று கூறியிருக்கிறார்.

Advertisement