என் அப்பாவை நினைத்தால் பெருமையாக இருக்கு - நடிகர் தனுஷின் எமோஷனல் பதிவு

ஹபீபி படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் பகிர்ந்த விஷயம்

By subhashini · 20/6/2026

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஹபீபி. இந்த படத்தை நேசம் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கஸ்தூரிராஜா, ஈசா, அனஸ்ரேயாராஜன், தனஸ்ரீசுதாகரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதை கொண்டு சென்ற விதமும் இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹபீபி படம்:

இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஹபீபி பட குழுவினரை பாராட்டி நடிகர் தனுஷ் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தொடர்ச்சியான படபிடிப்பு காரணமாக ஹபீபி படத்தை என்னால் பார்க்க முடியவில்லை. தாமதமாக தான் இன்று படத்தை பார்த்தேன். நான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் என்னுடைய அப்பா கொண்டு சென்றார்.

தனுஷ் பதிவு:

என் அப்பா "யூசுப்" கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. அப்பாவிடம் இருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடம் இருந்தும் மிகச் சிறப்பான நடிப்பை இயக்குனர் வாங்கியதோடு ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்தையும் தந்த இயக்குனருக்கும் பட குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களில் தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full