தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.

தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடியிருக்கிறார். தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.

காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தணுஷின் மூத்த மகன் தனுஷின் டி-ஷர்ட்டை அணிந்து இருக்கிறாராம். அந்த அளவிற்கு நடிகர் தனுஷின் மகன் வளந்துவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement