அப்பாவான சந்தோஷத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட அறிக்கை - என்ன தெரியுமா?

By subhashini · 3/3/2026

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் இவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான தாராள பிரபு, ஓமணப்பெண்ணே போன்ற படங்களும் ஹிட் அடித்தது. சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆனாலும் சிறந்த கதைகளை மட்டும் ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுத்தது நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் குறித்த தகவல்:

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இந்த படம் பல விருதுகளை குவித்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். இதற்கு இடையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று சொல்லப்பட்டது.

ஹரிஷ் கல்யாண் பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஹரிஸ் கல்யாணுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஹரிஷ் கல்யாண் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய அன்பான குடும்பத்தினர் அனைவரும் ரொம்ப அற்புதமான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மகள் பிறந்திருக்கிறாள். என்னுடைய மனைவி நர்மதாவும் நானும் ஒரு பெண் குழந்தையை வரவேற்று உள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் என்னுடைய இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.

மகள் பிறந்த செய்தி:

தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்கிறார்கள். இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கி இருக்கிறோம். எங்களது குடும்பத்தினர் நண்பர்கள் நல விரும்புகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full