ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படமே ஓடாதுன்னு சொன்னாங்க, ஆனால் - நடிகர் இளவரசு ஓபன் டாக்

By subhashini · 31/1/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா. சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படத்தை ஃபேமிலி படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரத்தனா, ஜென்ஷன் திவாகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் இல்லை என்றாலும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டு தங்களுடைய சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

தலைவர் தம்பி தலைமையில்:

அந்த வகையில் மேடையில் பேசிய நடிகர் இளவரசு, ஆரம்ப காலத்தில் ஆர் பி சவுத்ரி சாரிடம் கதை சொல்லப் போனால் யார் ஹீரோ என்றுதான் கேட்பார்? ஜீவா ஹீரோ என்றால் ஜீவா ஹீரோவா? அவனுக்கு படம் ஓடாது. வேற யாரையாவது சொல்லுங்கள் என்று விளையாட்டாக சொல்லுவார். ஆனால், அப்படி வளர்ந்த ஜீவா இன்று ஒரு தயாரிப்பாளருக்கு தேவையான சிறந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்.
காலையில் சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார். தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் பிரச்சனை தராத ஹீரோக்கள் இப்போது தமிழ் சினிமாவில் ரொம்ப குறைவாக தான் இருக்கிறார்கள்.

இளவரசு பேட்டி:

அதனால் தான் ஜீவாவின் வெற்றியை ஒரு சக நடிகனாக நான் அதிகம் ரசிக்கிறேன்.மாலை 6:00 மணிக்கு சென்று காலை 6:00 மணிக்கு ஷூட்டிங் இருக்கும். ஆனால், உதவி இயக்குனர்களும் செட் அசிஸ்டன்களும் இரவு இரண்டு மணிக்கே வந்து வேலைகளை எல்லாம் தயார் செய்வார்கள். இந்த மாதிரி இந்த படத்தில் நிறைய பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக நான் இந்த தருணத்தில் இருகரமும் கூப்பி வணங்குகிறேன். 2026 இந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்ற பயத்தில் இருந்தும் திடீரென்று ரிலீஸ் தேதி வந்தது.

https://www.youtube.com/watch?v=QKlrXOFofgU

ஜீவா பற்றி சொன்னது:

மதுரையில் காலை காட்சியில் கூட்டம் குறைவாக இருந்ததை கேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், மாலைக் காட்சி எல்லாம் ஹவுஸ் ஃபுல்லான போது நிம்மதி வந்தது. பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வ வெற்றி தான் இது. துபாயில் ஆடியோ லான்ச் விழா என்றதுமே வியப்பாக இருந்தது. ஆனால், அங்கு அவர்களுக்கு அளித்த மரியாதை விருந்தோம்பலை பார்த்து எனக்கு கூச்சமாகிவிட்டது. அவ்வளவு அன்பான மனிதர். இவ்வளவு பெரிய அரங்கில் ஒரு வெற்றி விழா நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full