என் மூஞ்சை பார்த்து பல நடிகைகள் நடிக்க மறுத்தாங்க, ஆனால் மதுபாலா - நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்

சினிமா வாழ்க்கை பற்றி நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்

By subhashini · 16/6/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல பிரச்சினைகளைத் தாண்டி வெளியான கருப்பு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் சூர்யாவுக்கு பிறகு தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தவர் இந்திரன்ஸ். முதல் பாதி முழுக்க சூர்யாவை விட அதிகமாக ஸ்கிரீன் பிரஷன்ஸ் இருந்தது இந்திரன்ஸ்க்கு தான்.

இவர் கருப்பு படத்தில் ஒவ்வொரு சீனிலும் சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். இந்திரன்ஸ் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர். இவருடைய நடிப்புக்கு தீனி போடும் எந்த கதாபாத்திரம் என்றாலும் புகுந்து விளையாடக் கூடியவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் டைலர் ஆகத்தான் பணியாற்றி வந்திருந்தார். இவருக்கு நடிப்பின் மீது சிறு வயதிலிருந்து ஆர்வம் இருந்ததால் நடிப்பு பட்டறையில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை படிப்படியாக வளர்த்திருந்தார். அதற்கு பிறகு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சூதாட்டம் என்ற மலையாள படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வந்தார்.

இந்திரன்ஸ் குறித்த தகவல்:

மேலும், தற்போது நடிகர் இந்திரன்ஸ் நடித்த சின்ன சின்ன ஆசை படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இந்திரன்ஸ்க்கு ஜோடியாக மதுபாலா நடித்திருக்கிறார். வாரணாசியின் பின்னணியில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இந்திரன்ஸ் முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வர்ஷா வாசுதேவ் இயக்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. அப்போது விழாவில் பேசிய நடிகர் இந்திரன்ஸ், பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் சில உயிர் உள்ள கதாபாத்திரங்கள் கிடைக்கும் போது எனக்கு ஒரு தயக்கம் இருக்கும்.

இந்திரன்ஸ் பேட்டி:

அத்தகைய ஒரு படம் தான் சின்ன சின்ன ஆசை. இந்த கதையைக் கேட்டவுடன் நான் சரி என்று நடிக்க ஒப்பு கொண்டு விட்டேன். மதுபாலா மேடம் தான் கதாநாயகி என்று என்னிடம் சொன்னார்கள். உடனே நான், கதாநாயகன் யார் என்று கேட்டால் என் பெயரை சொல்லி விடாதீர்கள், இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். காரணம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று தெரிந்தால் அவர்கள் என்னுடன் நடித்த தயக்கம் காட்டுவார்கள். நடிக்க விருப்பம் இருந்தாலும் வரமாட்டார்கள். பல இடங்களில் இது போல் எனக்கு நடந்திருக்கிறது. என்னுடன் நடிக்க பெரிய நடிகைகளின் பெயர்கள் சொன்னார்கள். ஆனால், இறுதி நேரத்தில் அவர்கள் படத்தில் நடிக்க வரமாட்டார்கள்.

சினிமாவில் பட்ட அவமானங்கள்:

நான் இதற்கு முன்பு நடித்த கதாபாத்திரங்களையும் என்னுடைய தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்க தயங்கினார்கள். அதனால் தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க வருவாரா? என்ற சந்தேகமாக இருந்தது. கதை பிடித்த உடன் மதுபாலா படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற படபடப்பு இருக்கிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் நான் ஹீரோயின்களுடன் நடிக்க வேண்டும் என்று நிறைய ஆசை இருந்தது. ஆனால், முடியவில்லை. இப்போ மதுபாலாவுடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு சந்தோசம். என்னை ஒதுக்கி விடாமல் தொடர்ந்து பயணித்ததால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. ஒரு புதிய தலைமுறை எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு என்று எமோஷனாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full