மனைவியை பிரிகிறாரா ஜெயம் ரவி? ஆர்த்தியின் செயலால் மேலும் எழுந்த சந்தேகம்

By subhashini · 25/6/2024

ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிய இருப்பதாக பரவி வரும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்தி தான் தற்போது ரசிகர்கள் பேரிடியாக இருக்கிறது.

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த 'டிக் டிக் டிக்' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

ஜெயம் ரவி- ஆர்த்தி குறித்த சர்ச்சை:

அதோடு நிறைய நிகழ்ச்சிகளில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி- ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பெருமையாக பேசியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்தது.

உண்மை காரணம்:

இதை பார்த்து பலரும், என்னாச்சு? என்ன காரணம்? ஏன் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், ஆர்த்தி, பயோவில் இருக்கும் தன்னுடைய கணவருடைய ஐடியை ஆர்த்தி நீக்கி இருக்கிறார். இதைப் பார்த்துதான் பலரும் பிரிந்து விட்டார்களா? விவாகரத்து வாங்க இருக்கிறார்களா? என்றெல்லாம் கூறி இருந்தார்கள். ஆனால், ஆர்த்தி இன்ஸ்டாகிராம் மட்டும் இல்லாமல் மற்ற சமூக வலைத்தளங்களில் இவருடைய பெயருக்கு பின்னால் இன்னும் 'ஆர்த்தி ரவி' என்று தான் இருக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து:

இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரியவில்லை, இது முற்றிலும் வதந்தி என்று தெரியவருகிறது. சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் சிலர் செய்யும் தேவை இல்லாத வேலையால் சேர்ந்து வாழ்ந்து இருக்கும் ஜோடிகளை கூட விவாகரத்து வாங்குகிறார்கள், பிரிந்து விட்டார்கள் என்று வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அந்த வரிசையில் தான் ஜெயம் ரவியின் பெயரும் வந்திருக்கிறது. மற்றபடி இவர்கள் இருவரும் பிரியவும் இல்லை, விவாகரத்தும் வாங்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி திரைப்பயணம்:

முதலில் இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வந்த 'ஜெயம்' என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அகிலன், இறைவன், சைரன் போன்ற படங்களும் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full