'வாழு வாழவிடு' பாடகி கெனிஷாவுடனான சர்ச்சைகளுக்கு மனம் திறந்த நடிகர் ஜெயம் ரவி- என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 21/9/2024

முதன் முறையாக தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்து நடிகர் ஜெயம் ரவி அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்- சைந்தவியை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக திகழ்கிறார் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி-ஆர்த்தி திகழ்ந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:

அதில், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைகளுக்கு பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

View this post on Instagram

A post shared by Aarti Ravi (@aarti.ravi)

ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:

பின் இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும். நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பு முயற்சிகள் மறுக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=9SpiRTT_pps

ஜெயம் ரவி-ஆர்த்தி குறித்த சர்ச்சை:

திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்று பலருமே கூறியிருந்தார்கள். காரணம், ஜெயம் ரவி-கெனிஷா இடையே பழக்கம் இருப்பதாலும், கெனிஷாவால் தான் இருவருமே பிரிந்தார்கள் என்றெல்லாம் பல செய்திகள் வருகிறது. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி அளித்திருக்கும் பதில் தான் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://www.youtube.com/shorts/tSr_zC0PbDs

ஜெயம் ரவி பேட்டி:

அதாவது, தற்போது ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிரதர். இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருந்தது . அதன் பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெயம் ரவி, வாழு வாழ விடு. ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்கலில் பாடியவர். அவருடைய வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி இந்த இடத்திற்கு வந்தவர். நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆசிரியர். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதில் பல பெருக்கு உதவனும். அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full