வாழ்க்கை ரொம்ப கஷ்டம், அம்மா அப்பா பட்ட கஷ்டம் - விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின் ஜெயம் ரவி அளித்த பேட்டி

By subhashini · 12/10/2024

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி தன்னுடைய விவகாரத்தை சோசியல் மீடியாவில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்று என்று கூறி இருந்தார். அதோடு ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் பேசாதீங்க.

அவர் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். இதை அடுத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேள்விக்கு கெனிஷாவும் பதிலடி கொடுத்து இருந்தார். அதேபோல் தன்னுடைய உடமைகள் எல்லாம் மீட்டு தர சொல்லி ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்ததாக கூறப்பட்டது. இதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் எடுத்த பேட்டியில் கூட ஜெயம் ரவி, என்னுடைய மனைவி பற்றி என் மகன்களுக்கு தெரியாது.

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:

அவர் எப்போதும் அவருடைய அம்மா தான். என் மகன்களுக்கு எந்த ஒரு தவறான செய்தி தெரியக்கூடாது என்று தான் நான் பேசவில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய மாமியார் தான் ரொம்ப கொடுமைக்காரர். ஆர்த்தி தேவையில்லாத வேலைகளை செய்கிறார். என்னுடைய எல்லா சொத்துக்களையும் அவரிடம் தான் இருக்கிறது. யாருக்காகவும் என்னுடைய கேரியரை அழித்துக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொன்னதாக கூறியிருந்தார். இப்படி நாளுக்கு நாள் ஜெயம் ரவி விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜெயம் ரவி பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயம் ரவி, சோசியல் மீடியாவில் பலரும் அவர்களுடைய மனதிற்கு தோன்றியதை சொல்கிறார்கள். அவர்கள் எது பேசினாலும் என்னை பாதிக்காது. குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் என்னுடைய பர்சனல் வாழ்க்கைக்குள் அனுமதித்துள்ளேன். அவர்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியும். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது என்னை கூறினால் மட்டும்தான் எனக்கு வலிக்கும். மற்றபடி மக்கள் என் படத்தை பற்றியோ, என் நடிப்பை பற்றியோ, விருதுக்கு தகுதி இல்லாதவன் என்று எதைப் பற்றி பேசினாலும் அதை நான் ஏற்றுக்கொண்டு அடுத்த படத்தில் என்னை இன்னும் மெருகேற்றுவேன்.

https://youtube.com/shorts/u12RXZh4buw?si=DfDJlW-pa22t4Fuk

வாழ்க்கை குறித்து சொன்னது:

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினால் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன், கடந்து சென்று விடுவேன். என்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இதைப் பற்றி யாரும் பெரிதாக பேசவோ, கவலைப்படவோ வேண்டாம். ரசிகர்களுக்கு நல்லது கெட்டது என அனைத்தும் தெரியும். அவர்கள் பேசுவதை என்னால் தடுக்க முடியாது. மேலும், என் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தைகள் நம்மை விட அறிவாளிகள். நாங்கள் ரொம்ப சிறிய குடும்பத்தில் இருந்து வந்து இப்போது மக்களிடம் ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கிறோம்.

https://youtu.be/PM8u_lUyXgQ?si=sjoBveUyAcfn1vhn

குடும்பம் குறித்து சொன்னது:

எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. என் அக்காவும் நானும் கடைசிப் பிள்ளைகள் என்பதால் அதிக செல்லம். எனக்கு எது தேவை என்றாலும் என் அக்கா தான் பேசுவார். எனக்காக அவங்க நிறைய கடிதம் எழுதி இருக்காங்க. அதை எல்லாம் படித்து கண்கலங்கி இருக்கேன். இப்பவும் எனக்கு கடிதம் எழுதிட்டு தான் இருக்கிறார்கள். இப்போது தீபாவளிக்கு என்னுடைய பிரதர் படம் வருகிறது. அக்கா-தம்பி உறவை பத்தி பேசப்படும் இந்த படத்தில் நிறைய காட்சிகள் என்னுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full