அப்ப நான் செய்த தவறால் இயக்குனர் டென்ஷன் ஆகிவிட்டார், மன்னிப்பும் கேட்டேன் - ஜெயராம் ஓபன் டாக்
காதல் மனைவி பற்றி ஜெயராம் சொன்னது
மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஜெயராம். இவர் தமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். 90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பல குரல் பேசும் கலைஞரும் ஆவார்.
இவருடைய காமெடி கலந்த நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்தது. அதிலும் மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” படத்தில் ஜெயராம் நடிப்பு அட்டகாசம். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படம் பரிமளா அண்ட் கோ. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஊர்வசி, மிஸ்கின், சஞ்சனா, சாண்டி, அனந்திகா, யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெயராம் குறித்த தகவல்:
இந்த படத்தை GKM தமிழ் குமரன் (தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ்) மற்றும் பாண்டிராஜ் (பசங்க ஃபிலிம்ஸ்) இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தான் இந்தப் படத்தை வெளியிட்டார். இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். காமெடி கலாட்டாவில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவி பற்றி மனம் திறந்து நடிகர் ஜெயராம், என்னுடைய மனைவியும் மறைந்த நடிகர் சீனிவாசனும் சேர்ந்து நடித்த படத்தை நான் அடிக்கடி பார்ப்பேன்.
ஜெயராம் பேட்டி:
அந்த படத்தினுடைய பெயர் வடக்கு நோக்கி யந்திரம். பஞ்சதந்திரம் படத்தைப் போலவே அந்த படமும் நல்ல நகைச்சுவை கதை அம்சம் கொண்டது. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அந்த படத்தை நான் போட்டு பார்ப்பேன். அந்த படத்தின் படபிடிப்பு தளங்களுக்கு நான் யாருக்கும் தெரியாமல் போய் என்னுடைய மனைவியை சந்திப்பேன். அப்ப நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த சமயம். ஸ்ரீனிவாசன் கிட்ட மட்டும் சொல்லிட்டு படப்பிடிப்பு தளத்துக்கு வருவேன். நாங்க காதலித்து இருந்த நேரத்தில் இந்த மாதிரி நாங்க வெளியே போனதுனால ஒரு நாள் சூட்டிங் பாதிக்கப்பட்டது.
மனைவி பற்றி சொன்னது:
இதை நான் எங்கேயும் சொன்னதில்லை. என்னுடைய படப்பிடிப்பு நடந்த பகுதியின் அருகில் தான் என்னுடைய மனைவி நடித்த படத்தினுடைய சூட்டிங் நடந்துட்டு இருந்தது. மாலை லைட் போடுவதற்குள் என்னுடைய மனைவி நடித்த ஒரு படத்தினுடைய பாடல் ஷூட் பண்ணியாக வேண்டும். அப்ப மொபைல் கிடையாது. என்னுடைய கார் ஹாரன் சத்தம் என்னுடைய மனைவிக்கு தெரியும். அன்னைக்கு நான் ஹாரன் அடித்ததும் ஷூட்டிங்கில் டச் அப் பண்ணிட்டு வந்துடுறேன்னு பொய் சொல்லிவிட்டு என் கூட வந்து விட்டார். அன்னைக்கு முடிக்க வேண்டிய சூட்டிங் நின்று விட்டது. அந்த படத்தின் இயக்குனரும் கோபமாகி திட்டிவிட்டார். அதன் பிறகு தான் நான் போய் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார்.