சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தேன் - உண்மையை உடைத்த நடிகர் ஜீவா, என்ன தெரியுமா?

By subhashini · 3/3/2025

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்காத காரணம் பற்றி ஜீவா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜீவா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின்னர் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியில் தான் முடிந்தது. அதனை அடுத்து இவர் கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த படம் பிளாக். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி, சாரா ஷியாம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை கே.ஜி பாலசுப்பிரமணி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஜீவா திரைப்பயணம்:

இப்படத்தை தொடர்ந்து தற்போது ஜீவா அவர்கள் அகத்தியா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பா.விஜய் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், ராசி கண்ணா, யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

ஜீவா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து நடிகர் ஜீவா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற படம் வந்தது. அந்த படத்தில் வில்லனாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு அந்த கெட்ட பிடிக்கவில்லை. அதனால் தான் அந்த வாய்ப்பை வேணாம் என்று மறுத்துவிட்டேன்.

வாய்ப்பை மறுத்த காரணம்:

என்னிடம் நிறைய இயக்குனர்கள் பல படங்களில் நடிக்க அழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த படங்களில் பாதி நான் மொட்டை அடிக்க வேண்டும், பாதி மீசை இல்லாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் நான் பண்ணி நடித்தால் என்னை வீட்டில் சேர்க்கவே மாட்டார்கள். அதனால் தான் இந்த மாதிரியான படங்களை எல்லாம் நிராகரித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், நடிகர் ஜீவா- மோகன்லால் இணைந்து 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அரண் என்ற படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகத்தியா படம்:

படத்தில் ஹீரோ ஜீவா ஆர்ட் டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டு சொந்த பணத்தை எல்லாம் செலவு செய்து மிகப் பெரிய அரண்மனை செட்டை ஏற்பாடு செய்கிறார். ஆனால், அந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே நின்று விடுகிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த ஜீவா ‘ஸ்கேர் ஹவுஸ்’ என்று மாற்றுகிறார். டிக்கெட் வாங்கி பொதுமக்களை எல்லாம் உள்ளே அனுப்பி திகில் அனுபவத்தை கொடுக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த அரண்மனைக்குள் உண்மையாகவே அமானுஷ்யம் விஷயங்கள் உலவுகின்றது. அந்த சமயத்தில் தான் அரண்மனை செட்டிற்கு கீழ் ஒரு சுரங்கம் இருப்பது தெரிய வருகிறது. அங்கு அர்ஜுன் என்பவர் வருகிறார். அர்ஜுன் யார்? அவர் என்ன செய்தார்? அவருக்கும் இந்த அரண்மனைக்கும் இருக்கும் தொடர்பு என்ன? ஜீவா தன்னுடைய தாயை காப்பாற்றினாரா? அரண்மனைக்குள் நடந்த அமானுஷ்யங்களுக்கு பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full